BSNL தனது பயனர்களுக்கு மீண்டும் அதிரடி வாய்ப்பு,
BSNL நிறுவனம் தனது மொபைல் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இன்கமிங் அழைப்புகள் வரும். இந்த சலுகை மார்ச் 22 ஆம் தேதிக்கு பின் வேலிடிட்டி நிறைவுற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலிடிட்டி நீட்டிப்பு தவிர ஊரடங்கின் போது டாக்டைம் தீர்ந்து போன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் "Work@Home" சலுகையின் பேரில் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக அறிவித்தது. இந்த சலுகை வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்காக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது.
"BSNL. பிரீபெயிட் சிம் கார்டு சேவை ஏப்ரல் 20 வரை நிறுத்தப்பட மாட்டாது, மேலும் ரூ. 10 இலவச டாக்டைம் இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏழை மற்றும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்" என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், தொழில்நுட்ப சந்தையின் முன்னணி நிறுவனங்களான ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் ஹூவாய் உள்ளிட்டவை தங்களது சாதனங்களுக்கான வாரண்டி சலுகை காலம் நீட்டிக்கப்படும் என அறிவித்தன. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்டவை கொரோனா வைரஸ் சந்தேகங்களை போக்கிக் கொள்ள புதிய சேவையை துவங்கின
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile