BSNL 4G SIM அப்க்ரேட் செய்யும்போது இலவச டேட்டா வழங்கப்படும்

Updated on 07-Nov-2023
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டாவை வழங்குகிறது.

2ஜி/3ஜி சிம்மை 4ஜிக்கு மேம்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் டேட்டா வழங்கப்படுகிறது

உங்கள் பழைய பிஎஸ்என்எல் சிம்மை 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தினால் இந்த இலவச டேட்டாவை நீங்கள்பெறலாம்.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், 2ஜி/3ஜி சிம்மை 4ஜிக்கு மேம்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது உங்கள் பழைய பிஎஸ்என்எல் சிம்மை 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தினால் இந்த இலவச டேட்டாவை நீங்கள்பெறலாம்..

பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில் இதைச் செய்து வருகிறது. BSNL ஆந்திரப் பிரதேசமும் ஒரு ட்வீட் செய்துள்ளது, இந்த ட்வீட்டில் உங்கள் பழைய 2G/3G சிம்மை 4G சிம்மிற்கு அப்டேட் செய்தால் 4ஜிபி டேட்டாவை இலவசமாகப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மூன்று மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

BSNL 4G SIM Upgrade

ஒரு முறை BSNL 4G SIMக்கு அப்க்ரேட் செய்தால், உங்களின் ஏரியாவுக்கு ஏற்றபடி ஹை ஸ்பீட் டேட்டா பயன்படுத்தலாம், 4ஜி சிம்மை மேம்படுத்த, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம், உரிமையாளர், ரீடைலர் விற்பனையாளர் அல்லது DSA ஆகியவற்றுக்குச் செல்லலாம் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

BSNL யின் ஆந்திரப்ரதேஷ் (AP) பயனர்கள SMS மூலம் 54040 மெசேஜ் அனுப்பி சிம் card டைப் தெரிந்து கொள்ளலாம்., உங்கள் சிம் 3ஜி என்று ஒரு மெசேஜை பெற்றால், உங்கள் சிம்மை இலவசமாக அப்க்ரேட் செய்யலாம் கடந்த சில நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை 4ஜி சிம்முக்கு அப்கிரேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

BSNL 4G SIM Upgrade

BSNL Diwali Offer

TelecomTalk அறிக்கையின் படி சமிபத்தில் BSNLஇரண்டு பண்டிகை சலுகை ஆபர் ‘BSNL Selfcare app’மூலம் ரீச்சார்ஜ் செய்பவர்களுக்காக கொண்டு வந்தது,, இந்த ஆஃபர்களில் ரூ.249க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 2 சதவீதம் தள்ளுபடியும், அக்டோபர் 21 முதல் கூடுதல் 3ஜிபி டேட்டாவும் கிடைக்கும் அந்த வகைகளில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் போது அடங்கும்: STV 251, 299, 398, 499, 599 போன்றவை ஆகும் மேலும் இதன் முழு ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இதை படிங்க : BSNL இந்த தீபாவளிக்கு செம்ம Extra நன்மைகள் வழங்கப்படுகிறது

பிஎஸ்என்எல் 4G Launch அப்டேட்

IT மற்றும் டெலிகாம் அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் படி BSNL இந்தியாவில் பெரிய அளவிலான 4G உள்கட்டமைப்பை தீபாவளியில் இருந்து பயன்படுத்தத் தொடங்கும். BSNL அதன் பயனர்களை 4G சிம்களுக்கு அப்டேட் செய்து தொழில்நுட்பத்தை அனுபவிப்பதற்காக ஊக்குவிப்பது, மேம்படுத்தலை எளிதாக்கும் அதே முயற்சியின் ஒரு பகுதியாகும்.

IMC 2023 இன் போது, ​​BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD), P K பூர்வார், நிறுவனம் ஜூன் 2024 க்குள் நாடு முழுவதும் 4G ஐப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார், அதன் பிறகு கவனம் 5G வெளியீடுக்கு மாறும். என கூறினார்

அக்டோபரில், BSNL இந்தியாவை கனேக்க்டிவிட்டி 23 ஆண்டுகளைக் கொண்டாடியது, தற்போது 2023-2024 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான 4G தளங்களை அறிமுகப்படுத்தும் பணியில் உள்ளது. என கூறப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :