BSNL இந்த தீபாவளிக்கு செம்ம Extra நன்மைகள் வழங்கப்படுகிறது

Updated on 03-Nov-2023
HIGHLIGHTS

(BSNL) இந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக தீபாவளி ஸ்பெசல் ஆபர் வழங்கப்படுகிறது

பி.எஸ்.என்.எல் இந்த தீபாவளிக்கு இரண்டு வித்தியாசமான நன்மையை வழங்குகிறது

எக்ஸ்க்ளுசிவ் தள்ளுபடிகளை மற்றொன்று குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மை

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) இந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக தீபாவளி ஸ்பெசல் ஆபர் கூடுதல் நன்மை மற்றும் எக்ஸ்க்ளுசிவ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது , பிஎஸ்என்எல் வழங்கும் தீபாவளி யின் ஆபர் நன்மை பற்றி பேசினால், பி.எஸ்.என்.எல் இந்த தீபாவளிக்கு இரண்டு வித்தியாசமான நன்மையை வழங்குகிறது ஒன்று ரீசார்ஜ் செய்வதில் எக்ஸ்க்ளுசிவ் தள்ளுபடிகளை மற்றொன்று குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா பலன்களை கொண்டுள்ளது சரி வாருங்கள் பார்க்கலாம்

BSNL Extra Data நன்மைகள்

பிஎஸ்என்எல் வழங்கும் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மைகள் பற்றி பேசினால் இந்த திட்டமானது ரூ,251 , ரூ,299, ரூ, 398 , ரூ,499 போன்ற திட்டங்களில் இந்த நன்மைகள் வழங்கப்படுகிறது இந்த நன்மை நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைக்கும்.. BSNL Self-Care App மூலம் திட்டங்களுக்கு ரீச்சார்ஜ் செய்தால் 3ஜிபி கூடுதல் டேட்டா நன்மை கிடைக்கும். இந்தச் சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் ப்ளே ஸ்டோர் அல்லது iOS ஸ்டோரில் இருந்து பிஎஸ்என்எல் செல்ஃப்-கேர் ஆப்பை டவுன்லோட் செய்து, மேலே கொடுக்கபட்டுள்ள திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்.

TelecomTalk யின் அறிக்கையின்படி பார்த்தால் பிஎஸ்என்எல் சமீபத்தில் Self-Care App அப்டேட் செய்யப்பட்டது, மேலும் இந்த சலுகைகள் பயனர்கள் அப்டேட் செய்யப்பட தளத்தை அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Recharge வவுச்சர் யின் நன்மைகள்

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த நான்கு திட்டங்களும் தமிழ்நாட்டுக்கு பொருந்தும் எனவே நீங்கள் பி.எஸ்.என்.எல் பயனராக இருந்தால் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து கூடுதல் நன்மைகள் பெறலாம். இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

BSNL Plan 251: இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் இலவசமாக 70GB டேட்டா Zing ம்யூசிக் நன்மைகளுடன், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது

BSNL Plan 299: ரூ,299 யில் வரும் திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், உடன் தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இதில் 30 நாட்களுக்கு இருக்கிறது.

BSNL Plan 398: :இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங் இதனுடன் இதில் 120GB ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும்.

BSNL Plan 499: இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மேலும் இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் பிஎஸ்என்எல் Tunes மற்றும் GAMEIUM யின் ப்ரீமியம் சேவை வழங்கப்படுகிறது, இதன் வேலிடிட்டியை பற்றி பேசினால், 75 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பிஎஸ்என்எல் திட்டங்கள் பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன, பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் தீபாவளி சலுகையின் கீழ் 3ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் வருகின்றன.

Exclusive Recharge Discount

அது மட்டுமின்றி, பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் மூலம் தங்கள் எண்களை ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மற்றொரு நன்மையும் உள்ளது. BSNL பயனர்கள் BSNL Self-Care App பயன்படுத்தும் போது, ​​249 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வவுச்சர்களில் பிரத்யேக 2 சதவீத தள்ளுபடியை அனுபவிக்க முடியும். Self-Care App பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மட்டுமே இந்த நன்மை கிடைக்கும்.

இதையும் படிங்க: Lava Blaze 2 5G VS Redmi 12 5G: இந்த இரண்டு 5G போன்களில் எது bsnl-offers-extra-benefits-subscribers-diwali-offer-know-here-allபெஸ்ட் ?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :