BSNL நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.
விலை உயர்ந்த முதல் மூன்று நிரந்தர மாதாந்திர ரீசார்ஜ்களில் BSNL. நிறுவனம் 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாகவும், மற்ற விலை குறைந்த போஸ்ட்பெயிட் சலுகைகளை செலக்ட் செய்வோர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தும் போது 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தெரிகிறது.
ஆறு மாத சலுகைகளுக்கும் BSNL . கேஷ்பேக் வழங்குகிறது. எனினும் இதற்கான தொகை குறைவாகும். ரூ.1,525 விலையில் வருடாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஒருவர் செலக்ட் செய்யும் போது ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். மாதம் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது பயனர்களுக்கு ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதேபோன்று ரூ.1,125 மாதாந்திர சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தாவை முழுமையாக செலுத்தினாலும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
விலை குறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பி.எஸ்.என்.எல். 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கான தொகையை செலுத்துவோருக்கும் BSNL .கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கு ஆறு மாதங்களுக்கான தொகையை முழுமையாக செலுத்தும் போது 12 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு ரூ.1,098 வரை கேஷ்பேக் கிடைக்கும். ரூ.1,125 மற்றும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 12 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
BSNL ரூ.725 மற்றும் ரூ.525 சலுகைகளை செலக்ட் செய்வோருக்கு 8 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு நான்கு சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
புதிய கேஷ்பேக் சலுகை முதற்கட்டமாக கேரளா வாடிக்கையார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சலுகை மற்ற வட்டாரங்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் BSNL வாடிக்கையாளர்களுக்கு 25 சவிகிதம் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது.