BSNL யின் இலவசமாக இரண்டு மாத பிராட்பேன்ட் சேவை சந்தோஷமா இருங்க…!

BSNL  யின் இலவசமாக இரண்டு மாத பிராட்பேன்ட்  சேவை சந்தோஷமா இருங்க…!
HIGHLIGHTS

பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

BSNL .அறிவித்திருக்கும் புதிய சலுகையில் அந்நிறுவனம் 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இலவச இணைப்பு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. 

இந்த சலுகையில் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சமீபத்தில் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி திட்டம் வழங்கப்படுகிறது.

இந்த சலுகை 20Mbps வேகத்தில் BSNL  அறிவித்த பல்வேறு சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 சலுகையின் கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிதாய் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வாங்குவோருக்கு பி.எஸ்.என்.எல். சலுகை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி சலுகையில் ரூ.99 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் இன்டர்நெட் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

இந்த சலுகையுடன் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 150 ஜிபி சலுகையில் ரூ.199, பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 300 ஜிபி சலுகை ரூ.299 மற்றும் BSNL . பிபிஜி காம்போ யுஎல்டி 600ஜிபி டேட்டா ரூ.399 விலையில் மூன்று சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, 10 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo