BSNL நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா சுனாமி என அழைக்கப்படும் புதிய சலுகை 26 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் தினமும் 1.5 ஜிபி வீதம் மொத்தம் 39 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.98 விலையில் பிரீபெயிட் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனமும் ரூ.92 விலையில் 6 ஜிபி டேட்டா சுமார் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. BSNL வழங்கும் ரூ.99 சலுகையில் 26 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (லோக்கல்/STD மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது. எனினும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லியில் வழங்கப்படவில்லை .
முன்னதாக BSNL நிறுவனம் ரூ.118 விலையில் பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.