BSNL. நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை ரூ. 698 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இந்த சலுகை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக செலக்ட் செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால் மற்றும் SMS போன்றவை வழங்கப்படவில்லை.
BSNL. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். இல்லாமல் 200 ஜி.பி. டேட்டா மட்டும் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கிடைக்கிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் இந்த சலுகைக்கான அறிவிப்பு வெளியாகலாம்.
சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை அறிவித்தது. முன்னதாக பி.எஸ்.என்.எல். அறிவித்த இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பி.எஸ்.என்.எல். ரூ. 698 சலுகை நவம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.