ஜியோவுக்கு போட்டியாக அமர்நாத் யாத்திரை செல்வோர்களுக்கு புதிய சிம் வழங்கும்.BSNL .

ஜியோவுக்கு போட்டியாக  அமர்நாத்  யாத்திரை  செல்வோர்களுக்கு  புதிய  சிம் வழங்கும்.BSNL .
HIGHLIGHTS

BSNL அமர்நாத் யாத்திரை சிம் கார்டு கட்டணம் ரூ. 230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 333 நிமிடங்களுக்கு இலவச டாக்டைம், 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது

சமீபத்தில் ஜியோ  அதன் பயனர்களுக்கு அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சலுகையை ரூ. 102 விலையில் வழங்கியது அதனை தோடர்ந்து ஜியோவுக்கு  போட்டியாக  BSNL   தந்து அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சிம் கார்டு வழங்க BSNL  நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

BSNL அமர்நாத் யாத்திரை சிம் கார்டு கட்டணம் ரூ. 230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 333 நிமிடங்களுக்கு இலவச டாக்டைம், 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பத்து நாட்கள் ஆகும். அதிகளவு பயனர்கள் வருவார்கள் என்பதால் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் மற்ற மாநில சிம் கார்டுகள் வேலை செய்யாது என்பதால், BSNL நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற்றிருக்கிறது.

அமர்நாத் யாத்திரை

சுற்றுலா பயணிகள் கூடும் வரவரேற்பு மையம் மற்றும் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேம்ப்களில் பயனர்கள் தங்களின் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ் ஆதாரங்களை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ளலாம். அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

ரிலையன்ஸ் ஜியோவும் அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சலுகையை ரூ. 102 விலையில் வழங்குகிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் அதிவேக 4ஜி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும் தினசரி பயன்பாட்டு அளவு 0.5 ஜி.பி.யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ அமர்நாத் யாத்திரை சலுகை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கிறது. மேலும் இச்சலுகையில் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படவில்லை.bsnl-offering

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo