வோடபோன், ஜியோபோன் போல BSNL இலவச பிராட்பேண்ட் சேவை கொண்டு வந்துள்ளது
BSNL நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி BSNL . லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
BSNL நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி BSNL . லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிய சலுகை BSNL சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இதனை ஆக்டிவேட் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதுவரை அதிகாரப்பூர்வமாக சேவை துவங்கப்படாத ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய முடிவினை எடுத்திருக்கிறது.
BSNL . லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ததும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் முகவரியில் கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.
இந்த இணைப்பின் மூலம் BSNL . நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது. 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்சமயம் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. இதனால் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
வழக்கமான BSNL . பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோர் இதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும், அந்த வகையில் புதிய சலுகையின் பேரில் இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இலவச பிராட்பேண்ட் சேவை மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். மேலும் சில இலவசங்களை வழங்குகிறது.
புதிய சலுகையின் மூலம் BSNL . நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க முயற்சிக்கிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை அறிவிக்கப்பட்டு தற்சமயம் மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile