BSNL யின் அதிரடி பம்பர் ஆபர் தினமும் 6.1GB டேட்டா வழங்குகிறது…!

Updated on 18-Dec-2018
HIGHLIGHTS

BSNL நிறுவனம் தனது பம்ப்பர் ஆஃபரை ஜனவரி 31, 2019 வரை நீட்டிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தினமும் 2.2 ஜி.பி. டேட்டா வழங்கிய சலுகையில் தற்சமயம் 2.1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக BSNL  பம்ப்பர் ஆஃபர் இரண்டு பிரீபெயிட் சலுகைகளில் சேர்க்கப்படுகிறது.

முன்னதாக 11 பிரீபெயிட் சலுகைகளுக்கு BSNL . பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.1,699 மற்றும் ரூ.2,099 ஆண்டு பிரீபெயிட் சலுகைகளில் BSNL. பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. மேலும் இவை முறையே தினமும் 2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. டேட்டா வழங்குகின்றன. 

அந்த வகையில் BSNL. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகள் தற்சமயம் முறையே தினமும் 4.1 ஜி.பி. மற்றும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்குகின்றன. 

BSNL  பம்ப்பர் ஆஃபர் முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் கீழ் பழைய சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. உதாரணத்திற்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை செலக்ட் செய்திருப்போருக்கு பம்ப்பர் ஆஃபரின் கீழ் தினமும் 3.1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும்.

முன்னதாக BSNL. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் STV . சலுகைகளான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 உள்ளிட்ட சலுகைகளுக்கு பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் BSNL . நிறுவனம் தனது பிராட்பேன்ட் சலுகைகளை மாற்றி முன்பை விட கூடுதல் நன்மைகள் , பழைய விலைக்கே வழங்கியது. இந்த நடவடிக்கை அந்நிறுவனத்தின் செலக்ட் செய்யப்பட்ட சில அன்லிமிட்டெட் சலுகைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கூடுதல் டேட்டா மட்டுமின்றி சில சலுகைகளில் டேட்டா பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது, எனினும் டேட்டா அளவு அதிகபட்சமாக ஆறு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. BSNL . பிராட்பேன்ட் ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,495, ரூ.1,745 மற்றும் ரூ.2,295 உள்ளிட்ட சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் அதிக பிரீமியம் சலுகையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

BSNL  நிறுவனம் தனது பம்ப்பர் ஆஃபரை ஜனவரி 31, 2019 வரை நீட்டிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் BSNL. பம்ப்பர் ஆஃபரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :