பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற பிஎஸ்என்எல் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது நான்கு சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்து கொடுக்கும் வசதியை பிஎஸ்என்எல் வழங்கி இருந்தது. எனினும், இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
மை பிஎஸ்என்எல் செயலிக்கான 2.0.46 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் பயனர்கள் மற்ற பிஎஸ்என்எல் அக்கவுண்ட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 4 சதவீதம் கேஷ்பேக் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த சலுகை மே 31 ஆம் தேதி நிறைவு பெறும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது.
பின் வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்ற எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தன. இந்த வரிசையில், தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து இருக்கிறது.
.ஊரடங்கு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் வெளியில் சென்று ரீடெயில் கடைகளில் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதால், ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் வசதியை பயன்படுத்துவதே ஒற்றை வழியாக இருக்கிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் இணைய வசதியற்ற பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் தொகையில் 4 சதவீதம் வழங்குகிறது. இதேபோன்று வோடபோன் ஐடியா நிறுவனம் 6 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது.