BSNL வழங்குகிறது IPL 11 அசத்தும் ஆபர் 5 ரூபாய்க்கு 3GB டேட்டா அறிமுகம் செய்துள்ளது

Updated on 09-Apr-2018
HIGHLIGHTS

IPL 2018 கிரிகெட் காலத்தை பயன்படுத்தி கொள்ள BSNL தனது பயனர்களுக்கு 153 GB அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

IPL 2018 கிரிகெட் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கிரிகெட் ப்ரியர்களை குறிவைத்து புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் பயனர்கள் 153 GB டேட்டா பெற முடியும். 

Rs .258-க்கு கிடைக்கும் புதிய சலுகையில் 51 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 3 GB டேட்டா வழங்கும் சலுகை ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்என்எல் பயனர்கள் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிக்க சிறப்பானதாக இருக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ 102 GB டேட்டா வழங்கும் சலுகையை ரூ.251 விலையில் அறிவித்தது. இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை தனது மைஏர்டெல் டிவி செயலியில் பயனர்களுக்கு இலவசமாக நேரலையில் வழங்குவதாக அறிவித்தது. 

மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ரூ.253 சலுகை விலை குறைவானதாக இருக்கிறது. எனினும் பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டா அனைத்தும் 3ஜி வேகத்தில் கிடைக்கும், ஜியோ சலுகைகளில் பயனர்கள் அதிவேக 4ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2018 வரை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த காலக்கட்டத்திற்குள் புதிய சலுகையில் ரீசார்ஜ் செய்து ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை பார்த்து ரசிக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :