BSNL அறிவித்துள்ளது 151 ரூபாய்க்கு புதிய அதிரடி ப்ரீபெய்ட் சலுகை.
இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சலுகையில் அன்லிமிட்டெட் கால்கள் மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களிலும் கிடைக்கும்
BSNL நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது மேலும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 151 ரூபாய் என நிர்ணயம் செய்யொப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டதின் பெயர் அபினந்தன் 151 பிரீபெயிட் சலுகை என வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு வழங்குகிறது.
மேலும் இந்த புதிய அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD கால்களுக்கு எந்தவித லிமிட்டின்றி வழங்குகிறது. இதில் எந்த கட்டுப்பாடுகளையும் வழங்கவில்லை.
BSNL அறிவித்து இருக்கும் பல சலுகையை பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது என்று இருப்பினும் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் கால்கள் மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களிலும் கிடைக்கும் எனBSNL . தெரிவித்துள்ளது
இந்த புதிய சலுகையில் தினமும் 100 BSNL . மற்றும் 1 ஜி.பி. அதிவேக 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. சலுகையின் வேலிடிட்டி 180 நாட்கள் என்ற போதும், இதில் அறிவிக்கப்பட்டுள்ள வாய்ஸ் கால்,SMS . மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை 24 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால் 180 நாட்களுக்கு இன்கமிங் கால்கள் மட்டும் தொடர்ந்து வரும். புதிய சலுகையை ஆக்டிவேட் செய்ய BSNL . வாடிக்கையாளர்கள் 'PLAN 151' என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile