BSNL யின் வெறும் 300க்குள் வரும் திட்டத்தில் கிடைக்கும் 2 மாத வேலிடிட்டி

Updated on 25-Oct-2024

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNLபாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, மேலும் இது விரைவில் அனைத்து அடங்களிலும் 4G மற்றும் 5G நெட்வொர்க் கொண்டு வர மிக மும்முரமாக வேலை செய்து வருகிறது, இதில் Jio-Airtel அதிவேகமாக செல்வதை நம்மால் காணமுடிகிறது. இருப்பினும் BSNL இங்கு ஒன்னும் சலுச்சதாக இல்லை இங்கு தினமும் ஒரு புது புது திட்டத்தை கொண்டு வண்டு கொண்டே இருக்கிறது.

300 ரூபாய்க்கும் குறைவான விலையில் அதாவது 298 ரூபாய் மட்டுமே 52 நாட்கள் செல்லுபடியாகும் BSNL திட்டத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்தத் திட்டத்தின் முழு விவரங்களைப் பார்ப்போம்.

BSNL யின் வெறும் 298யில் வரும் பட்ஜெட் பிரென்ட்லி திட்டம்.

BSNL யின்இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், இது 298ரூபாயின் விலையில் வருகிறது, இந்த திட்டத்தில் 52 நாட்கள் வேலிடிட்டி அதாவது சுமார் 2 மாதம் வரையிலான வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் Unlimited Free Calling உடன் இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.

BSNL இன் இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது 52 நாட்கள் வேலிடிட்டியாகும் திட்டத்தில் 52GB டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், திட்டத்தின் நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் எல்லா டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்திய பிறகும், உங்கள் நெருங்கியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முடியும், ஏனெனில் இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் 100 SMS பெறலாம்.

இதையும் படிங்க:BSNL யின் லோகோ மாற்றத்துடன் 7 புதிய சேவை அறிவிப்பு இனி குஷி படுத்த வந்தாச்சு

இந்த திட்டம் யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

டேட்டாவைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், காலிங் மற்றும் நீண்ட கால வேலிடிட்டி மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் கஸ்டமர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த திட்டத்தை நீங்கள் வாங்கலாம், வேறுவிதமாகக் கூறினால், இந்த திட்டம் அத்தகைய பயனர்களுக்கானது என்றும் கூறலாம் முன்னுரிமை அழைப்பு மற்றும் நீண்ட செல்லுபடியாகும். நீங்களும் அத்தகைய வாடிக்கையாளராக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்காக மட்டுமே.

  • இருப்பினும் உங்களுக்கு அதிகமானடேட்டா திட்டத்தை பெற விரும்பினால், நீங்கள் மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தை பெற வேண்டி இருக்கும்
  • இந்த திட்டம் 249ரூபாயில் வருகிறது
  • இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2GB டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது
  • இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 45 நாட்களுக்கு வழங்குகிறது.
  • இப்பொழுது நீங்கள் யோசிங்க இந்த இரண்டு திட்டத்தில் எது பெஸ்ட் என
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :