BSNL சூப்பர் ஆபர் இந்த பொங்கலுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி

Updated on 13-Jan-2025
HIGHLIGHTS

BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் 2 மிக சிறந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,

BSNL யின் 215 ரூபாய் மற்றும் 628ரூபாயில் அதிகபட்சமான நன்மை வழங்குகிறது

குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் அதிகபட்சமான டேட்டா நன்மையை பெறலாம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் 2 மிக சிறந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, BSNL லிஸ்ட்டில் ஏற்கனவே பல குறைந்த திட்டங்கள் இருந்தாலும் , ஆனால் இப்போது உங்களுக்கு இலவச காலிங் மற்றும் டேட்டாவுடன் இரண்டு புதியகொண்டு வந்துள்ளது.

உங்களிடம் BSNL சிம் இருந்தால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதாவது இந்த பொங்கலுக்கு உங்கள் அன்பானவர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையுடன் 215 ரூபாய் மற்றும் 628ரூபாயில் அதிகபட்சமான நன்மை வழங்குகிறது அதாவது இந்த வழங்கிறது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் அதிகபட்சமான டேட்டா நன்மையை பெறலாம் சரி வாங்க இந்த இரு திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

BSNL யின் ரூ,215 திட்டம்.

BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையான 215ரூபாயில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் இலவச காலிங் நன்மையை பெறலாம் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் கிடைக்கும் டேட்டா பலன்களைப் பற்றி பேசினால், அதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும், அதாவது மொத்தமாக 60ஜிபி அதிவேக டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்த முடியும். நிறுவனத்தின் மற்ற திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்திலும் கஸ்டமர்கள் தினமும் 100 இலவச SMS பெறலாம்.

இதையும் படிங்க:BSNL போலவே இருக்கும் இந்த போலியான வெப்சைட் எச்சரிக்கை மக்களே ஒரே கிளிக்கில் பணம் அபேஸ் ஆகலாம்

BSNL யின் ரூ,628 திட்டம்.

இப்பொழுது பிஎஸ்என்எல் மற்றொரு திட்டம் ரூ,628 யில் வருகிறது, BSNL இன் ரூ.628 திட்டத்தில், நீங்கள் 84 நாட்கள் நீண்ட வேலிடிட்டியைப் பெறலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தை எடுக்கும் கஸ்டமர்கள் இலவச தேசிய ரோமிங்கின் பலனையும் பெறலாம். இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 4ஜி டேட்டாவையும் நிறுவனம் வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் 3ஜிபி வரை அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . இந்த திட்டத்தில் , 84 நாட்களுக்கு மொத்தம் 252 ஜிபி டேட்டா திட்டத்தில் கிடைக்கிறது.இத தவிர இதில் Hardy Games, Challenger Arena Games, Gameon, Astrocell, Lystn Podcast, Zing Music, Wow Entertainment மற்றும் BSNL Tunes இலவச சப்ஸ்க்ரிசன் ஆகியவை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :