BSNL யின் அதிரடி ரூ. 299 மற்றும் ரூ. 491 புதிய ப்ராண்ட்பேண்ட் திட்டம்.
புதிய சலுகைகள் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்துள்ளது. இவற்றின் விலை ரூ. 299 மற்றும் ரூ. 491 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாதாந்திர சலுகைகளும் விளம்பர நோ்க்கில் அறிவிக்கப்பட்டுள்ள. இவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25 வரை வழங்கப்படுகிறது.
புதிய சலுகைகள் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய மாதந்திர சலுகைகளில் முறையே 50 ஜி.பி. மற்றும் 120 ஜி.பி. டேட்டா, அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்BSNL லேண்ட்லைன் இணைப்பின் மூலம் வழங்கப்படுகிறது.
BSNL ரூ. 299 பிராட்பேண்ட் சலுகையில் 50 ஜி.பி. டேட்டா நொடிக்கு 20 எம்.பி. வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. 50 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்பட்டுவிடும். ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இந்த சலுகையில் அனைத்து நெட்வொர்க் நம்பர்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ. 500 தொகையினை பாதுகாப்பு முன்பணமாக செலுத்த வேண்டும். ரூ. 299 பிராட்பேண்ட் சலுகை ஆறு மாதங்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதன் பின் வாடிக்கையாளர்கள் ரூ. 399 சலுகையை பயன்படுத்தலாம். இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா நொடிக்கு 8 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது.
இரு சலுகைகளும் மாதாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டாலும், இதற்கான கட்டணத்தை அரையாண்டு அல்லது 12 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.இந்த சலுகையும் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின் வாடிக்கையாளர்கள் ரூ. 499 சலுகையை பயன்படுத்தலாம். இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ. 491 பிராட்பேண்ட் சலுகையில் 120 ஜி.பி. டேட்டா நொடிக்கு 20 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்று நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்பட்டுவிடும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile