BSNL யின் திட்டம் ரூ,345 60 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டாவின் மஜா

Updated on 30-Sep-2024
HIGHLIGHTS

BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய ரூ,345 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 60 நாட்கள் ஆகும்

இதில் தினமும் 1GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.

BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய ரூ,345 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் மூலம் பயனர்கள் ஒழுக்கமான டேட்டா மற்றும் நடுத்தர கால வேலிடிட்டியை பெற ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 60 நாட்கள். BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) அதன் கஸ்டமர்களுக்கு 4G நெட்வொர்க்கை வழங்கவில்லை என்பது உனக்கு தெரியும் இருப்பினும் பல இடங்களில் அதற்க்கான முழு முயற்சியையும் எடுத்து வருகிறது விரைவில் BSNL 4G நன்மை அனைவருக்கும் கிடைக்கும் சரி இந்த புதிய திட்டத்தின் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,345 ப்ரீபெய்ட் திட்டம்.

BSNL யின் ரூ,345 கொண்ட ப்ரீபெய்ட் திட்டதை பற்றி பேசினால், இதில் தினமும் 1GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 60 நட்காளுக்கு இருக்கிறது இதன் டேட்டா லிமிட் குறைந்த பிறகு 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது.

BSNL யின் திட்ட்டம் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் சரியான போட்டியை தரும் கூடவே இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என் என்றால் இதுவரை எந்த நிறுவனமும் ரூ,345 யில் 60 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கவில்லை இந்த திட்டத்தின் தினசரி வெறும் ரூ, 5.75 ஆகும் கஸ்டமர்கள் ஒரு மீடியம் வேலிடிட்டியுடன் அதாவது 60 நாட்களுக்கு தினமும் 1GB டேட்டா திட்டத்தை பெற விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும் ஏன் என்றால் Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea (Vi) யில் இது போன்ற நன்மை கிடைக்காது.

BSNL யின் ரூ,91 கொண்ட திட்டம்

இந்த திட்டமானது 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இதில் வொயிஸ் காலிங் 15P நிமிடத்திற்கும், டேட்டாவிற்கு 1p/MB, மற்றும் 25p/SMS க்கு வசுலிக்கப்படுகிறது மேலும் இத திட்டத்தில் அவுட்கோயிங் கால் நன்மை கிடைக்காது நீங்கள் 60 நாட்கள் சிம் எக்டிவாக வைக்க விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்

BSNL 4G மற்றும் 5G எப்பொழுது வரும் ?

அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டருக்கு நாடு முழுவதும் கூடிய விரைவில் அதிவேக நெட்வொர்க் சேவை கிடைக்க வேண்டும். தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் ஏற்கனவே தங்கள் 4G நெட்வொர்க்குகளை வலுப்படுத்தியுள்ளனர் மற்றும் இப்போது 5G யின் கவரேஜை ஆழப்படுத்தி வருகின்றனர். BSNL மீண்டும் வருவதற்கு 4G மற்றும் 5G வெளியீடுகளுடன் வேகமாக இருக்கும்

இதையும் படிங்க :Vodafone Idea வெறும் 175ரூபாயில் OTT நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :