BSNL யின் Rs 399க்கு வழங்குகிறது அன்லிமிட்டட் காலிங் முழுமையாக 74 நாட்களுக்கு வழங்குகிறது…!

Updated on 27-Aug-2018
HIGHLIGHTS

BSNL . நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரக்ஷா பந்தன் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது

BSNL . நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரக்ஷா பந்தன் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்கு பின் மற்ற நிறுவனங்களை போன்றே BSNL . தனது சலுகைகளை மாற்றியமைத்து, குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. 

அந்த வகையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவை ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. இந்த திய சலுகை வேலிடிட்டி  74 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. BSNL . STV399 சலுகையை பயனர்கள் (ஆகஸ்டு 26) முதல் பெற முடியும். எனினும் இந்த சலுகை எதுவரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

பி.எஸ்.என்.எல். ரூ.399 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் மெசேஜ் உள்ளிட்டவை 74 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. கூடுதலாக பிரத்யேக ரிங் பேக் டோன் மற்றும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகை தேசிய ரோமிங் வழங்கப்பட்டாலும் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் வழங்கப்படவில்லை.

BSNL . புதிய ரூ.399 சலுகையைப் போன்று ஜியோ ரூ.349 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. ஜியோ வழங்கும் ரூ.349 சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., 1.5 ஜிபி டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதிகள் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று ஜியோ ரூ.398 சலுகையில் இதே சலுகைகளுடன் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும், ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :