BSNL யின் இந்த இடத்துக்கும் வந்தாச்சு IFTV சேவை இனி செட்டப் பாக்ஸ் இல்லாமல் Free 500 லைவ் டிவி பார்க்கலாம்
BSNL சமிபத்தில் அதன் IFTV சேவையை குஜராத் வட்டாரங்களில் கொண்டு வந்துள்ளது, தனது இன்டர்நெட் புரோட்டோகால் அடிப்படையிலான IFTV சேவையை வேறொரு மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் பயனர்கள் 500 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை இலவசமாக பார்க்கலாம், அதுவும் செட்-டாப் பாக்ஸ் இல்லாமல். பிராட்பேண்ட் கனெக்சன் மூலம் சந்தாதாரர்கள் HD தரத்தில் லைவ் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க முடியும் என்று அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் கூறுகிறது. சிறப்பு என்னவென்றால், இந்த சேவையை பழைய LCD அல்லது LED டிவியிலும் பயன்படுத்தலாம், இதற்கு ஒரு ஃபயர் ஸ்டிக் பொருத்த வேண்டும்.
BSNL யின் IFTV சேவை குஜராத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பிஎஸ்என்எல் புதிய சேவையானது இந்தச் சேவை குஜராத் டெலிகாம் வட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது, இது BSNL ஆல் அதன் அதிகாரப்பூர்வ X அக்கவுன்ட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சேவை மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. பஞ்சாப் வட்டத்தில், BSNL இந்த முயற்சிக்காக SkyPro உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Hon'ble @CMDBSNL launched today #IFTV service in Gujarat circle, bringing a new era of seamless connectivity and digital entertainment.#BSNL redefines home entertainment with IFTV – India’s First Fiber-Based Intranet TV Service with access to 500+ live channels and premium Pay… pic.twitter.com/SBi6Em9R1W
— BSNL India (@BSNLCorporate) January 7, 2025
இதை தவிர சமிபத்தில் புதுச்சேரியில் அதன் டேரக்ட்-டு-மொபைல் (D2M) சேவையான BiTV அறிமுகம் செய்தது, இந்தச் சேவையின் கீழ் மொபைல் பயனர்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை இலவசமாகப் பார்க்கலாம்.
BSNL யின் இந்த சேவையின் நன்மை என்ன?
- BSNL யின் சோசியல் மீடியா போஸ்ட் படி, IFTV சேவை தடையற்ற கனெக்சன் மற்றும் டிஜிட்டல் என்டர்டைன்மென்ட் அனுபவத்தை வழங்குகிறது.
- 500+ லைவ் டிவி சேனல்கள்: ஃபைபர் அடிப்படையிலான இன்டர்நெட் டிவி சேவையின் கீழ் 500க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் கட்டண டிவி கண்டெண்டை பார்க்கலாம்.
- இடையுறு -இலவச அனுபவம்: எந்த இடையுறு இல்லாமல் தெளிவான தரத்தில் டிஜிட்டல் பார்க்கலாம் .
- கூடுதல் கட்டணங்கள் இல்லை: BSNL Bharat Fiber பயனர்களுக்கு இந்தச் சேவை இலவசமாகக் கிடைக்கும்.
No Smart TV? No Problem!
— BSNL India (@BSNLCorporate) January 6, 2025
Turn any screen into a limitless streaming hub. Access BSNL's IFTV on your regular TV with TV stick and enjoy 500+ channels.#StreamLimitless #BSNLIndia #BSNLIFTV pic.twitter.com/xHIa5g6Uuy
BSNL இந்த ஆண்டு அதன் 4G மற்றும் 5G சேவை அறிமுகமாகும்
மறுபுறம், பிஎஸ்என்எல் தனது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை இந்த ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய மொபைல் டவர்களை அந்நிறுவனம் நிறுவி வருகிறது, அதில் 60,000க்கும் மேற்பட்ட டவர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இது தவிர, BSNL தனது 3G சேவையை ஜனவரி 15 முதல் நிறுத்தப் போகிறது. இந்த தேதிக்குப் பிறகு, பயனர்கள் 3G நெட்வொர்க் வசதியைப் பெற மாட்டார்கள், ஏனெனில் நிறுவனம் இந்த டவர்களை 4G க்கு மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: Jio New Year திட்டம் ஆபர் நன்மை 3 நாட்களின் முடிய போகுது 500GB டேட்டா இனி கிடைக்குமா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile