BSNL நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக IPTV என்று சுருக்கமாக அழைக்கப்டும் இன்டர்நெட் ப்ரோட்டோகால் டெலிவிஷன் (Internet Protocol Television) என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. IPTV என்றால் என்ன இதனால் கிடைக்கும் பயன் என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.
BSNL IPTV சேவையை முதலில் ஆந்திரப்ரதேஷ் வாடிக்கையாளர்களுக்கு வட்டாரங்களில் ஜனவரி 2023 யில் கொண்டுவரப்பட்டது. சிட்டி ஆன்லைன் மீடியாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, மேலும் பல கேமிங் இன்டர்நெட் சேவைகளுடன் குடும்பங்களை மாற்றும் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக உல்கா டிவி பிராண்டின் கீழ் சேவைகள் வழங்கப்படும்.
IPTV என்பது ஒரு இன்டர்நெட் ப்ரோட்டோகால் டெலிவிஷன் என்பது ஒரு ஆன்லைன் சேவை (Online Service) ஆகும். இதன்கீழ் டிவி (TV) அல்லது ஸ்மார்ட்போன் வழியாக லைவ் டிவி சேனல்கள் உட்பட பல வகையான ஆன்லைன் கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
BSNL ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக நாகர்கோவிலில் IPTV சேவைகளை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நிலையான அக்சஸ் இயக்குநர் விவேக் பன்சால் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தி இந்துவின் அறிக்கையின்படி, BSNL, IPTV சேவைகளை E2 Info Solutions உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது,
வருகிற ஏப்ரல் 14 முதல், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் (பாரத் ஃபைபர்) வாடிக்கையாளர்களுக்கு ஐபிடிவி சேவைகள் கிடைக்கும். பின்னர் இந்த சேவை தமிழ்நாடு வட்டம் முழுவதும் படிப்படியாக விறிவுப்படுத்தும்
BSNL E2IS IPTV எனப்படும் இன்-ஹவுஸ் லான்ச்சர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஆண்ட்ராய்டு ஐபிடிவி பாக்ஸில் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லான்ச்சர் கூகுள் பிளேஸ்டோரில் (Google Play Store) வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
பிஎஸ்என்எல்-ன் இந்த ஐபிடிவி சேவையானது ஆண்ட்ராய்டு டிவி செட்களில், செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே வேலை செய்யும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நீங்களொரு பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் வாடிக்கையாளராக இருந்தால் "fms.bsnl.in/iptvreg" வழியாக, அல்லது இது தொடர்பாக பிஎஸ்என்எல் அனுப்பிய எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்பை பயன்படுத்தி, ஐபிடிவி-க்கான கோரிக்கையை முன்பதிவு செய்யலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஐபிடிவி சேவைகளை அதன் ஃபைபர் சேவையின் வழியாக மாதம் ரூ.130 க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. எச்டி பேக்குகளின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன. எச்டி ஸ்டார்டர் ரூ.270 க்கு கிடைக்கிறது; இது 211 டிவி சேனல்களை வழங்கிறது. அடுத்ததாக எச்டி போனான்ஸா ரூ.400 க்கு கிடைக்கிறது; இது 223 டிவி சேனல்களை வழங்குகிறது