நாம ஒருபோதும் சிம் கார்ட் இல்லாம போன் கால் பேசி இருக்க மாட்டோம் ஆனா இனி சிம் கார்டும் இல்லாமலும் நீங்க பேசலாம் அப்படி ஒரு புதிய வசதியை தான் BSNL ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்த வசதியை நாட்டிலேயே முதல் முறையாக அறிவிப்பது இதுவதான் இருக்கும்.
இதுதொடர்பாக BSNL வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இன்டர்நெட் மூலமாக இயங்கும் போன் சேவையை BSNL அறிமுகப்படுத்துகிறது. இன்டர்நெட் சேவை உள்ள ஆன்ட்ராய்ட், வின்டோஸ், ஆப்பிள் உள்ளிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள், கம்ப்யுட்டர் , லேப்டாப்கள் ஆகியவற்றில் விங்ஸ் (Wings) எனப்படும் ஆப் இன்ஸ்டால் செய்து அன்லிமிட்டட் கால்களை (ஆடியோ, வீடியோ) கால்கள்களை நீங்கள் பேச முடியும்.
இந்த ஆப் மூலம் எந்தவொரு போன் நிறுவனத்தின் நம்பர்களையும் (லேன்ட்லைன் உள்பட) கால் செய்ய முடியும். வைஃபை வசதி உடையவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவைக்கு சிம் கார்டு அவசியம் இல்லை. எந்தவொரு நெட்வொர்க் வைஃபை மூலமாகவும் கால்களை மேற்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கும் கால்கள் பேச முடியும்
இந்த ஆப் பெற BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் ரூ. 1,099 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது www.bsnl.co.in என்ற வெப்சைட் முலமாக ஆன்லைன் முறையில் கட்டணத்தை செலுத்தலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.