Bsnl நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீட்டித்து உள்ளது. நொடிக்கு 50 எம்பி வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கும் மூன்று புதிய சலுகைகளை BSNL அறிவித்து இருக்கிறது.
200ஜிபி சிஎஸ்111 சலுகையில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா ரூ. 490 விலையில் வழங்கப்படுகிறது. 300 ஜிபி சிஎஸ்112 சலுகையின் கட்டணம் ரூ. 590 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பியுஎன் 400 ஜிபி சலுகையில் மாதம் 400 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400ஜிபி என அழைக்கப்படுகிறது. இவை அதிகபட்சம் 400 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பியுஎன் 400 ஜிபி சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையையும் வழங்குகிறது.
BSNL 200 ஜிபி சிஎஸ்111 மற்றும் 300 ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400 ஜிபி சலுகைகள் தற்சமயம் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய சலுகைகள் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.