BSNL அறிமுகம் செய்தது WhatsApp சாட்போட் அனைத்து வேலைகளும் ஒரு நொடியில் முடியும்
BSNL அதன் WhatsApp Chatbot சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
இதில் வாடிக்கையாளர்கள் WhatsApp மூலம் சேட் செய்யலாம் பல சேவைகளைப் பெறலாம்
BSNL தமிழ்நாடு X யில் ஒரு போஸ்டின் மூலம் வாட்ஸ்அப் சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது,
தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனமும் தயாராகி வருகிறது. அரசுக்கு சொந்தமான நிறுவனம் தனது பாரத் ஃபைபர் சேவையின் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டிற்கும் கடுமையான போட்டியை அளித்து வருகிறது, இப்போது, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த BSNL அதன் WhatsApp Chatbot சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் WhatsApp மூலம் சேட் செய்யலாம் பல சேவைகளைப் பெறலாம் எந்தவொரு புகார் அல்லது கேள்விக்கும் நொடிகளில் தீர்வு கிடைக்கும்.
BSNL தமிழ்நாடு X யில் ஒரு போஸ்டின் மூலம் வாட்ஸ்அப் சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை எளிதாக அணுகும் மற்றும் அவர்களின் புகார்களையும் பதிவு செய்யும். இதில், பயனர்கள் வாட்ஸ்அப்பில் Hi என்று அனுப்புவதன் மூலம் மட்டுமே கிடைக்கும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த முயற்சியின் மூலம் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Introducing the BSNL Chatbot – your sophisticated Bharat Fiber virtual assistant!
— BSNL TamilNadu (@BSNL_TN) November 15, 2023
Get all your queries resolved with just a simple WhatsApp message to 18004444 and effortlessly access a one-stop solution for all your enquiries. @BSNLCorporate #BSNLChatbot pic.twitter.com/upvAdpTOj1
இதற்காக, பிஎஸ்என்எல் தனது செல்ப் கேர் ஆப்பை மேம்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில், பயனர்கள் சேட் பாக்சிளிருந்து Hi அனுப்புவதன் மூலம் உரையாடலைத் தொடங்க வேண்டும். சாட்பாட் பயனர்களுக்கு விருப்பங்களை வழங்கும், மேலும் அவர்கள் இருக்கும் ஆப்சனை தேர்ந்தெடுத்து தொடர வேண்டும்.
BSNL Chatbot எப்படி பயன்படுத்துவது ?
கான்வேர்செசச்ன் தொடங்க, 18004444 என்ற நம்பருக்கு Hi என்று அனுப்ப வேண்டும். இந்த இணைப்பின் மூலமும் நீங்கள் அதை அணுகலாம்.
இதையும் படிங்க:Chennai Metro அறிமுகம் செய்தது QR அடிப்படையிலான டிக்கெட் இனி நீண்ட துரம் வரிசையில் நிக்க தேவை இல்லை
எந்த எந்த சேவைகளுக்கு நன்மை கிடைக்கும் ?
புதிய சாட்போட் மூலம், உங்களுக்காக புதிய ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்யலாம். இது தவிர, பில் விவரங்களையும் இதன் மூலம் சரிபார்த்து, பணம் செலுத்தவும் முடியும். முன்பு செய்த பில் பேமெண்ட்களின் விவரங்களையும் பார்க்கலாம். பில்லை PDF ஆக பதிவிறக்கம் செய்யவும் சாட்போட் உங்களை அனுமதிக்கிறது.
புகார்களை பதிவு செய்தல், அவற்றின் நிலையை சரிபார்த்தல் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை மாற்றுதல் ஆகியவை மற்ற அம்சங்களில் அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile