BSNLயின் அதிரடியான திட்டத்தால் திணறும் Jio, முழுசா 5 மாதம் வேலிடிட்டி

Updated on 22-Aug-2024
HIGHLIGHTS

BSNL ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அதன் குறைந்த விலை மற்றும் நீண்ட வேலிடிட்டியாகும்

இங்கே நாம் யின் ரூ.997 திட்டத்தைப் பற்றி பேசினால் இது நீண்ட நாள் வேலிடிட்டியுடன் வருகிறது

டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் காலர் ட்யூன்கள் மற்றும் தினசரி SMS போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

டெலிகாம் திட்டங்களின் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் அதிகமான பயனர்களை ஈர்க்க, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான BSNL ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அதன் குறைந்த விலை மற்றும் நீண்ட வேலிடிட்டியாகும். இங்கே நாம் யின் ரூ.997 திட்டத்தைப் பற்றி பேசினால் இது நீண்ட நாள் வேலிடிட்டியுடன் வருகிறது நிறைய டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் காலர் ட்யூன்கள் மற்றும் தினசரி SMS போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முழு விவரங்களைப் பார்ப்போம்…

BSNL ரூ,997யில் கிடைக்கும் நன்மை என்ன

BSNL ரூ,997யில் வரும் இந்த திட்டத்தில் மொத்தமாக 160 நாட்கள் வெளிடிட்டியை தரும் அதாவது மொத்தமாக 5 மாதங்கள் வரை இருக்கும், இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது இது 160 நாட்களுக்கு மொத்தம் 320 ஜிபி வரை இருக்கும், இதை தவிர நீங்கள் எந்த நெட்வர்க் பயன்படுத்தினாலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நனமையுடன் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தில் நாடு முழுவதும் இலவச ரோமிங் மற்றும் ஹார்டி கேம்ஸ், ஜிங் மியூசிக் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான அக்சஸ் ஆகியவை அடங்கும், இது கனெக்டிவிட்டி மற்றும் என்டர்டைன்மென்ட் இரண்டையும் விரும்பும் கஸ்டமர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது.

BSNL யின் 4G மற்றும் 5G சேவை எப்பொழுது வரும்?

பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை அக்டோபர் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. நிறுவனம் ஏற்கனவே 25000 4G தளங்களை நிறுவுவதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த சேவையின் சோதனை பல பகுதிகளில் தொடங்கியுள்ளது, மேலும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு 4ஜி சிம்களை வழங்கத் தொடங்கியுள்ளது. நிறுவனம் தனது 4ஜி சேவைகளை டெல்லி மற்றும் மும்பையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பிறகு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இது தவிர, BSNL அதன் 5G சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது அதன் பயனர்களுக்கு வேகமான கனெக்சன் மற்றும் சிறந்த சேவை தரத்தை உறுதியளிக்கிறது. டெலிகாம் துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த புதிய சலுகைகளுடன் போட்டித்தன்மையுடன் இருப்பதை BSNL நோக்கமாகக் கொண்டுள்ளது.

BSNL யின் ரூ.997 ரீசார்ஜ் திட்டம் நீண்ட கால வேலிடிட்டி மற்றும் செலவு குறைந்த டேட்டா மற்றும் காலிங் சேவைகளை விரும்புவோருக்கு சிறந்த ரீசார்ஜ் விருப்பமாகும். 4G மற்றும் எதிர்கால 5G சேவைகளின் வரவிருக்கும் அறிமுகத்துடன், BSNL இந்தியாவில் உள்ள பெரிய டெலிகாம் நிறுவனங்களுக்கு வலுவான மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இதையும் படிங்க: Jio 198 புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மை என்ன பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :