BSNL வழங்குகிறது Rs .9-க்கு 2 ஜிபி டேட்டா, மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்…!
BSNL .நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகள் ரூ.9 மற்றும் ரூ.29 விலையில் கிடைக்கிறது
BSNL .நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகள் ரூ.9 மற்றும் ரூ.29 விலையில் கிடைக்கிறது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
BSNL ரூ.9 விலையில் வழங்கும் சலுகையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்றொரு சலுகையான ரூ.29 விலையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100SMS , அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங் டோன்பேக் உள்ளிட்டவை ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது
சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளில் அன்லிமிட்டெட் கால்கள் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தேசிய ரோமிங் சேவை இரண்டு சலுகைகளுக்கும் பொருந்தும்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் ரூ.47 விலையில் சலுகைகளை வழங்குகின்றன. ஏர்டெல் ரூ.47 சலுகையில் 125 நிமிடங்களுக்கு அன்லிமிட்டெட் கால்கள் , லோக்கல் , STD மற்றும் இன்டர்நெஷனல் ரோமிங், 500 எம்பி டேட்டா, 50SMS . வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.47 சலுகையில் 125 நிமிடங்கள் அழைப்புகள், 50 SMS மற்றும் 500 எம்பி டேட்டா வழங்குகிறது.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.27 விலையில் சலுகையை அறிவித்தது. ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 SMS . வழங்கப்படுகிறது. இதன் வாய்ஸ் கால் அளவில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile