BSNL யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் வேலிடிட்டி, 40GB டேட்டா இது வெறும் தமிழ்நாடு மக்களுகாகும்
BSNL ,அதன் ரூ.151 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது.
இந்த திட்டம் தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும்(work from home) பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
நிறுவனம் 2020 இல் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இருப்பினும், 2022 வாக்கில், இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL),அதன் ரூ.151 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. இந்த திட்டம் தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும்(work from home) பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் 2020 இல் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இருப்பினும், 2022 வாக்கில், இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 2 நாட்கள் குறைக்கப்பட்டு 28 நாட்களாகும். இதன் காரணமாக, இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான விலை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், தற்போது இந்த நிறுவனம் மீண்டும் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம்.
BSNL ரூ,151 யில் கிடைக்கும் நன்மை மற்றும் தகவல்.
BSNL யின் ரூ,151 திட்டத்தை பற்றி பேசினால், இது ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும் இந்தத் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய, செயலில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்குத் தேவைப்படும். இந்த திட்டம் இன்னும் 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதாவது புதிய வேலிடிட்டி 30 நாட்களாகும். இந்த மாற்றம் தமிழ்நாடு வட்ட பயனர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் மாற்ற இடங்களில் உதரணமாக சத்தீஸ்கரில் இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதே 28 நாட்களுக்கு இருக்கிறது. இது தவிர, ஜிங்கின் இலவச சப்ச்க்ரிப்சன் இதில் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேறு எந்த நன்மைகளும் சேர்க்கப்படவில்லை. இது ஒரு டேட்டா வவுச்சர் எனவே இதிலிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ. 5.033 ஆகவும், ஒரு ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துவதற்கான செலவு ரூ.3.77 ஆகவும் மாறும்.
இதையும் படிங்க:Redmi Note 13 4G சீரிஸ் 200mp கேமராவுடன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க
இது ஒரு மிக சிறந்த திட்டமாகும் தினமும் 1ஜிபி அல்லது 2ஜிபி டேட்டாவை மட்டும் பயன்படுத்துவதை மட்டும் கட்டுப்படுத்த விரும்பாத அனைவருக்கும் இது ஒரு சிறந்த திட்டமாகும். இது மொத்த டேட்டாவாகும், எனவே பயனர்கள் விரும்பினால், அதை ஒரே நேரத்தில் பயன்படுத்தி, கூடுதல் டேட்டாவிற்கு மீண்டும் ரீசார்ஜ் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile