BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்), அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர், அதிக டேட்டா வவுச்சர் பயனர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும் இரண்டு டேட்டா வொய்ஸ் வவுச்சர்களை கொண்டுள்ளது. இரண்டு திட்டங்கள் ரூ.299 திட்டம் மற்றும் ரூ.599 திட்டம் ஆகும். இந்தத் திட்டங்கள் புதியவை இல்லை என்றாலும், அதிக டேட்டா ஆப் மற்றும் அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள் தேவைப்படுபவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
ரூ.299 திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் கால் , 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. FUP டேட்டா முடிந்ததும், வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் 30 நாள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது மற்றும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.
BSNL Rs 599 பிளான்
மறுபுறம், வொர்க் பிரோம் ஹோம் செய்பவர்களுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.599 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டியாகும் காலத்துடன் வருகிறது. இது தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. இவை தவிர, இந்த திட்டம் Zing + PRBT + Astrocell மற்றும் 12 AM முதல் 5 AM வரை அன்லிமிடெட் இலவச இரவு டேட்டாவையும் வழங்குகிறது.
இந்தத் திட்டங்கள் BSNL யின் லேட்டஸ்ட் சலுகைகளாக இல்லாவிட்டாலும், அதிக டேட்டவை விரும்பும் பயனர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்தத் திட்டங்கள் அதிவேக இன்டர்நெட் இணைப்பு, அன்லிமிடெட் காலிங் பலன்கள் மற்றும் ஒரு நாளைக்கு நல்ல அளவு எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன, இந்தச் சேவைகள் தேவைப்படுபவர்களுக்கு அவை ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
முடிவில், BSNL யின் ரூ.299 மற்றும் ரூ.599 திட்டங்கள் புதியவை இல்லை , ஆனால் அதிக டேட்டா பயன்பாடு மற்றும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் தேவைப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.