பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கி வந்த இலவச அழைப்பு சலுகையை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் BSNL லேண்ட்லைனில் அனைத்து கால்களும் இலவசம் என்ற சலுகை திட்டத்தை செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இச்சலுகையை நிறுத்துவதாக அறித்துள்ளது. மேலும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் சலுகைக்கான கால அளவை இரவு 10.30 முதல் காலை 6 மணியாக குறைத்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் கஸ்டமர்களை அதிருப்தியடைந்துள்ளனர்.
ஜியோ வருகையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் பிஎஸ்என்எல் இதே காரணத்தால் இது போன்ற சலுகைகளை நிறுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.