BSNL அரசு ஒதுக்கிய பட்ஜெட் இனி அனைத்திலும் டாப் மத்ததெல்லாம் சும்மா

BSNL அரசு ஒதுக்கிய பட்ஜெட் இனி அனைத்திலும் டாப் மத்ததெல்லாம் சும்மா
HIGHLIGHTS

ஜூலை 23, 2024. அன்று தெரிவித்தார் டெலிகாம் திட்டங்களுக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு

2024-25 நிதியாண்டில் ரூ.1,28,915 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது

இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அரசு ரூ, 82,916 கோடி ஷேர் பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23, 2024. அன்று தெரிவித்தார் டெலிகாம் திட்டங்களுக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அரசு முன்மொழிந்துள்ளது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த இரு BSNL மற்றும் MTNL (Mahanagar Telephone Nigam Limited) சேர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு பெற்றுள்ளன. இந்த நிதியை டேக்நோலாஜி அப்க்ரேட் மற்றும் BSNL யிண்வளர்ச்சிக்கு பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.

BSNL முன்னேற்றத்துக்கு மொத்தம் எவ்வளவு கொடுக்கப்பட்டது

2024-25 நிதியாண்டில் ரூ.1,28,915 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் ரூ.17 ஆயிரம் கோடி வரும். இந்த ரூ.17 ஆயிரம் கோடி டெலிகாம் சேவை வழங்குநர்கள், பாரத்நெட் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக செலவிடப்படும். இதில் ரூ.17,510 கோடி தொலைத்தொடர்பு துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படும்.

இதை தவிர மேலும் அரசு 3,668.97ரூபாய் கோடி இந்த பணம் MTNL இறுக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது மேலும் டெக்னோலஜி மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்காக, பட்ஜெட்டில் ரூ.34.46 கோடியும், சாம்பியன் சேவைத் துறை திட்டத்துக்கு ரூ.70 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. PLProduction Linked Incentive) திட்டத்திற்கு மேலும் ரூ.1,806.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமபுரங்களிலும் கிடைக்கிக்கும் குறைந்த விலையில் சிறந்த இன்டர்நெட்

2025 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை 2024 நிதியாண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் 14.65 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த பட்ஜெட்டில் பாரத்நெட்டில் செலவிடப்பட்ட பட்ஜெட்டில் 70 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத்நெட் உதவியுடன், ஆப்டிகல் ஃபைபர் சேவையின் உதவியுடன் கிராமங்களுக்கு இணையம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் கிராமங்களுக்கு வயர்ட் இன்டர்நெட் கனெக்சன் வழங்கப்படும்.

கிராமங்களுக்கு இணையதள வசதி அவசியம் என்பது அரசுக்குத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், BSNL ஒரு நல்ல ஆதாரமாக இருக்க முடியும். இதற்காக பாரத்நெட் பட்ஜெட்டை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 2023 நிதியாண்டில், பாரத்நெட் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.1,500 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியது. இந்த எண்ணிக்கை 2024 நிதியாண்டில் ரூ.5000 கோடியாக அதிகரித்துள்ளது. அதே இடைக்கால பட்ஜெட் 2024 இல், பாரத்நெட் திட்டத்தின் பட்ஜெட்டை அரசாங்கம் 8,500 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.

BSNL விரைவில் 5G

பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது. இதற்காக டாடா க்ரூபுடன் பிஎஸ்என்எல் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், 4ஜி டவரில் 5ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் தயாராகி வருகிறது. இது தனித்தன்மையற்ற தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. அதன் வரிசையில், 5ஜி சேவையை ஏர்டெல் வழங்குகிறது. ஜியோ தனி தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

இதையும் படிங்க: Jio மக்களின் புலம்பலை கேட்டு வேலிடிட்டியை அதிகரித்தது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo