BSNL . நிறுவனம் பம்ப்பர் ஆஃபர் எனும் சலுகையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் அதிக பிரபலமாக இருக்கும் பம்ப்பர் ஆஃபர் மூலம் பயனர்களுக்கு தினமும் 2.2 ஜி.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கும்.
BSNL பம்ப்பர் ஆஃபர் ரூ.186 முதல் ரூ.2,099 வரையிலான சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளுக்கும் பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டது. BSNL . முந்தைய அறிவிப்பின் படி பம்ப்பர் ஆஃபர் நேற்று (ஜணவரி 31) நிறைவுற்றது.
இந்நிலையில்,BSNL . பம்ப்பர் ஆஃபர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்படுவதாக BSNL . நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி BSNL . பம்ப்பர் ஆஃபர் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கிடைக்கும்.
பம்ப்பர் ஆஃபர் நீட்டிக்கப்பட்டிருப்பதால் BSNL ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.2,099 போன்ற சலுகைகளை செலக்ட் செய்வோருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தினமும் 2.2 ஜி.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கும். முன்னதாக இதே சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.1 ஜி.பி. டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாற்றப்பட்டிருக்கும் பம்ப்பர் ஆஃபர் மூலம் ரூ.186, ரூ.429 மற்றும் ரூ.999 சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். மூன்று பி.எஸ்.என்.எல். சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இதேபோன்று ரூ.485 மற்றும் ரூ.666 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்தவரிசையில் ரூ.1,699 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.2 ஜி.பி. டேட்டாவும், ரூ.2,099 சலுகையில் தினமும் 6.2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.