BSNL யின் சரவெடி தீபாவளி சலுகை , இலவச கால் அதிரடி அறிவிப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘லேண்ட்லைன்’ மற்றும் ‘பிராட்பேண்ட்’ வாடிக்கையாளர்கள்(அன்லிமிடெட் கால்களை செய்யும் வசதியை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
“எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பும் இந்த வேளையில் BSNL ‘லேண்ட்லைன்’ மூலம் சிறந்த அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம்.
இதன்படி வாடிக்கையாளர்கள், எந்த ஒரு ‘லேண்ட்லைன்’ மற்றும் செல்போன் எண்கள் வைத்திருக்கும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வரம்பற்ற அழைப்புகளை செய்யலாம். இந்த சலுகை அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதுகுறித்து BSNL. இயக்குனர் விவேன் பன்சால் கூறும் போது,
இதனால் விழாக்காலத்தை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம். எனவே நல்வாழ்த்துகள் என்பது சிறப்பான இணைப்பை கொடுப்பதினாலேயே தெரிவிக்கமுடியும். ‘பாரத் பைபர் சேவை’யின் கீழ் மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் வழங்கப்படும். ‘பிராட்பேண்ட்’ சேவையில் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட இருக்கிறது''. என தெரிவித்தார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile