BSNL யின் அசத்தல் ஆபர் ரூ.78க்கு 20 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை..!

Updated on 08-Nov-2018
HIGHLIGHTS

BSNL புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படும் புதிய சலுகை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL. நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படும் புதிய சலுகை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரூ.78 சலுகையில் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் ‘STV COMBO78’ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு SMS . அனுப்ப வேண்டும்.

பத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தம் 20 ஜி.பி. டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்

முன்னதாக BSNL  வாடிக்கையாளர்களுக்கு 8.8 சதவிகிதம் கூடுதல் டாக்டைம் தேர்வு செய்யப்பட்ட சில பிரீபெயிட் சலுகைகளில் வழங்குவதாக அறிவித்தது. மேலும் மஹா தீபாவளி சலுகையின் கீழ் ரூ.1699 மற்றும் ரூ.2099 விலையில் இரண்டு சலுகைகளை ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ரூ.1,699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.

ரூ.2,099 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS., பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :