digit zero1 awards

ஏர்டெல்லை அடுத்து BSNL அதன் நான்கு குறைந்த விலை திட்டத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளது.

ஏர்டெல்லை அடுத்து BSNL  அதன் நான்கு குறைந்த விலை திட்டத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளது.
HIGHLIGHTS

BSNL யின் நான்கு ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

BSNL ரூ.71, ரூ.104, ரூ.135 மற்றும் ரூ.395 திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுத்தியுள்ளது

இவை அனைத்தும் STV ரீசார்ஜ் திட்டங்கள். இருப்பினும், இந்த திட்டங்களை பிஎஸ்என்எல் ஏன் நிறுத்தியது என்ற கேள்வி எழுகிறது.

BSNL யின் நான்கு ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, ஏர்டெல் மூலம் மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டது. மலிவான ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்துவதில் ஏர்டெல்லின் பாதையை பிஎஸ்என்எல் நிறுவனமும் பின்பற்றுகிறது. ரூ.71, ரூ.104, ரூ.135 மற்றும் ரூ.395 திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுத்தியுள்ளது. இவை அனைத்தும் STV ரீசார்ஜ் திட்டங்கள். இருப்பினும், இந்த திட்டங்களை பிஎஸ்என்எல் ஏன் நிறுத்தியது என்ற கேள்வி எழுகிறது.

குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் ஏன் மூடப்பட்டன

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்துவதற்கான சூத்திரத்தை கொண்டு வந்துள்ளது. அதே வழியில், பிஎஸ்என்எல் மற்றும் பிற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கான குறைந்த விலை  ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்துகின்றன.

STV திட்டம் என்றல் என்ன ?

STV திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இவை சிறப்பு கட்டண வவுச்சர்கள். இது ஒரு சிறப்பு ரீசார்ஜ் ஆகும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் பிரபலம் காரணமாக, இந்த திட்டங்களின் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

BSNL 71 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில், பயனர்கள் 30 நாட்களுக்கு ரூ.20 டாக்-டைம் பெறுவார்கள். இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் காலிங் வசதி இல்லை.

BSNL 104 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 18 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 300 நிமிடங்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ் வசதியைப் வழங்குகிறது. மேலும் தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட்டது.

BSNL 135 ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் இந்த திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டியாகும் . மேலும், காலிங்க்கு 1440 வொய்ஸ் நிமிடங்கள் வழங்கப்பட்டன.

BSNL 395 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில் 71 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. மேலும், 3000 நிமிட ஆன்-நெட் அழைப்புடன், 1800 நிமிட ஆஃப்-நெட் அழைப்பும் கிடைத்தது. இலவச அழைப்பு முடிந்ததும், பயனர்களுக்கு நிமிடத்திற்கு 20 பைசா வசூலிக்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo