BSNL . நிறுவனம் தனது பிராட்பேன்ட் சலுகைகளை மாற்றி முன்பை விட கூடுதல் நன்மைகளை , பழைய விலைக்கே வழங்குகிறது. புது நடவடிக்கை அந்நிறுவனத்தின் செலக்ட் செய்யப்பட்ட சில அன்லிமிட்டெட் சலுகைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
BSNL . ரூ.675 சலுகையில் ஏற்கனவே தினமும் 5 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இதே சலுகையில் மாதம் 150 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா மட்டுமின்றி சில சலுகைகளில் டேட்டா பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது, எனினும் டேட்டா அளவு அதிகபட்சமாக ஆறு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. BSNL . பிராட்பேன்ட் ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,495, ரூ.1,745 மற்றும் ரூ.2,295 உள்ளிட்ட சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் அதிக பிரீமியம் சலுகையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
BSNL . ரூ.845 சலுகையில் தற்சமயம் தினமும் 10 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 300 ஜி.பி. டேட்டா கிடைக்கும். முன்னதாக இதே சலுகையில் பயனர்களுக்கு 50 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டேட்டா மட்டுமின்றி இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று ரூ.999 மற்றும் ரூ.1199 சலுகைகளில் தற்சமயம் முறையே தினமும் 15 ஜி.பி. மற்றும் 20 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.1,495 சலுகையில் முன்னதாக 140 ஜி.பி. டேட்டா மாதம் முழுக்க வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் தினமும் 25 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பனர்களுக்கு மொத்தம் 750 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.
அதிக விலை கொண்ட பி.எஸ்.என்.எல். ரூ.2,295 பிராட்பேன்ட் சலுகையில் தற்சமயம் தினமும் 35 ஜி.பி. டேட்டா 24Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் 24Mbps வேகத்தில் மொத்தம் 200 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
BSNL .ரூ.1745 பிராட்பேன்ட் சலுகையில் தற்சமயம் தினமும் 30 ஜி.பி டேட்டா 16Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் மொத்தம் 140 ஜி.பி. டேட்டா 16Mbps வேகத்தில் வழங்கப்பட்டு இருந்தது. தினசரி டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.
BSNL . வழங்கும் அனைத்து அன்லிமிட்டெட் சலுகைகளிலும் தினசரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு கடந்ததும், டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் BSNL பிராட்பேன்ட் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்.