இந்திய அரசின் டெலிகாம் நிறுவனமான BSNL 2018-19 நிதியாண்டில் 54,000 புதிய செல்போன் டவர் நிறுத்தியுள்ளது இதனுடன் நாளுக்கு நாள் BSNL டவர்கள் அதிகரித்த வகையில் இருக்கிறது.
BSNL நிறுவனம் 4ஜி செல்போன் டவர்களையும் வைக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் வரை சுமார் 5,340 4ஜி டவர் நிறுவப்பட்டுள்ளன BSNL . நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தற்போது அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இதனால் செல்போன் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறி, BSNL யில் இணைந்து வருகின்றனர்.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி வாடிக்கையாளர் எண்ணிக்கையை கூட்டிய இரண்டே நிறுவனங்களில் ஒன்றாக பி.எஸ்.என்.எல். விளங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 லட்சம் அதிகரித்துள்ளது.
2018-19-ம் ஆண்டில் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எம்.என்.பி.முறையில் தனியார் நிறுவனங்களில் இருந்து விலகி BSNL வாடிக்கையாளர்களாக இணைந்து உள்ளனர்.
ரூ.78, ரூ.98 மற்றும் ரூ.298 சிறப்பு கட்டண வவுச்சர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு “ஈராஸ் நவ்” என்னும் உயர்மதிப்பு சேவையை BSNL சமீபத்தில் இலவசமாக அளித்துள்ளதன் மூலம் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளோடு அளவற்ற திரைப்படங்கள் மற்றும் பிரத்யேக வீடியோ தொடர்களை கண்டு களிக்கும் வசதியை அளித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யும் வகையில் BSNL . செயல்பட்டு வருகிறது என்று BSNL. இயக்குனர் ஷீத்லா பிரசாத் தெரிவித்துள்ளார்.