BSNL வழங்குகிறது ரூ.299யில் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்..!

Updated on 03-Dec-2018
HIGHLIGHTS

BSNL .நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் கிடைக்கும் புதிய சலுகை BSNL சேவையில் இணையும் புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

BSNL  .நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் கிடைக்கும் புதிய சலுகை  BSNL சேவையில் இணையும் புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே BSNL சேவையை பயன்படுத்துவோருக்கு புது சலுகையை பயன்படுத்த முடியாது.

புது அறிவிப்பின் படி BSNL. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 ஜி.பி. டேட்டாவினை நொடிக்கு 8 எம்.பி. (8Mbps) வேகத்தில் வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் பயனர்கள் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா பயன்படுத்த முடியும். தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி. (1Mbps) ஆக குறைக்கப்படும்.

1 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுவதால் இந்த சலுகை பிராட்பேன்ட் பயனர்களுக்கானதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இதனைBSNL . இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பிராட்பேன்ட் மட்டுமின்றி அந்நிறுவனம் BSNL நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குகிறது. எனினும் இந்த வசதி லோக்கல் மற்றும் STD கால்களை வெறும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே வழங்குகிறது.

மற்ற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வோருக்கு ரூ.300 மதிப்புள்ள இலவச அழைப்புகளை BSNL . வழங்குகிறது. இத்துடன் வார நாட்களில் தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை இலவச வாய்ஸ் கால்களும், ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.

இதுமட்டுமின்றி பயனர்களுக்கு மாதம் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புது சலுகை BSNL நிறுவன ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகை ஆக்டிவேட் செய்யப்பட்டதில் இருந்து மூன்று மாதங்கள் அல்லது 180 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :