BSNL புதிய 2 Broadband plans உடன் 4000GB டேட்டா மற்றும் OTT நன்மை

Updated on 28-Mar-2024
HIGHLIGHTS

BSNL இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

BSNL பாரத் ஃபைபர் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

இந்த திட்டங்களின் சரியான விலை ரூ.599 மற்றும் ரூ.699 ஆகும்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களில் ஒன்று OTT (over-the-top) நன்மைகளுடன் வருகிறது மற்றும் மிகவும் நியாயமான விலையிலும் உள்ளது. BSNL இன் ஃபைபர்-பிராட்பேண்ட் சேவை – BSNL பாரத் ஃபைபர் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்குகிறது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ள இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி இன்று பேசுவோம்.

இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 1000க்கு கீழ் விலை கொண்டவை மற்றும் OTT நன்மைகளுடன் ஹை ஸ்பீட் இன்டர்நெட் வழங்குகின்றன. இந்த திட்டங்களின் சரியான விலை ரூ.599 மற்றும் ரூ.699 ஆகும். ரூ.599 திட்டம் ஃபைபர் பேசிக் OTT என்றும், ரூ.699 திட்டம் ஃபைபர் பேசிக் சூப்பர் என்றும் அழைக்கப்படுகிறது.

#BSNL புதிய 2 Broadband plans

BSNL Fiber Basic OTT Plan of Rs 599

BSNL யின் பைபர் பேசிக் OTT திட்டமான 599 ரூபாயில் வருகிறது இதில் கஸ்டமர்களுக்கு 75 Mbps இன்டர்நெட்டை வழங்குகிறது. இது 4TB அல்லது 4000GB மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு இதன் ஸ்பீட் 4 Mbps ஆகக் குறைகிறது. இந்த திட்டத்தில் இலவச பிக்சட் லைன் கனெக்சன் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் இது Disney+ Hotstar Superக்கான இலவச OTT சந்தாவுடன் வருகிறது.

#BSNL Extra Benifit

Fiber Basic Super Plan of Rs 699

BSNL Fiber super பிளனின் விலை ரூ,699 ஆகும், இதனுடன் இதில் 125 Mbps ஸ்பீட் வழங்குகிறது, இது பயனர்களுக்கு 4TB வரையிலான மாதாந்திர டேட்டா மற்றும் வரம்பற்ற வொயிஸ் காலுடன் இலவச பிக்சட் லைன் கனெக்சன் வழங்குகிறது. 4TB FUP டேட்டா தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 8 Mbps ஆக குறைகிறது. இந்த திட்டம் பஞ்சாப் டெலிகாம் சர்க்கிள் தவிர நாடு முழுவதும் கிடைக்கிறது.

இந்த திட்டங்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டங்களுடன் செல்லும் வாடிக்கையாளர்கள் நிலையான ஐபி முகவரியையும் பெறலாம், இது ஸ்டேட்டிச் ஐபிவி4/6க்கு ஆண்டுக்கு ரூ.3000 ஆகும்

இதையும் படிங்க: This week OTT: இந்த வாரம் OTT யில் பார்த்து மகிழ சூப்பர் movies

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :