ஜியோக்கு டாட்டா காட்டும், BSNL யில் புதிய பிராட்பேண்ட் சலுகை ரூ. 777 லிருந்து ஆரம்பம்.

Updated on 16-Sep-2019

BSNL . நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 777 சலுகையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோஃபைர் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். மீண்டும் ரூ. 777 சலுகையை அறிவித்திருக்கிறது. இந்த சலுகை பிராட்பேண்ட் சேவைகளில் ஒரு ஜி.பி. டேட்டாவுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

BSNL  ரூ. 777 சலுகையில் மாதம் 500 ஜி.பி. டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 20Mbps ஆக குறைக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்ட ரூ. 777 சலுகை தற்சமயம் விளம்பர நோக்கில் மீண்டும் வழங்கப்படுகிறது.

கடந்த மாதம் ஜியோஃபைபர் சேவை வணிக ரீதியில் அறிவிக்கப்பட்டது முதல் பி.எஸ்.என்.எல். நிறுவன சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு தனது பழைய ரூ. 777 சலுகையை பி.எஸ்.என்.எல். மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ. 849 சலுகையை மாற்றியமைத்தது. 

அந்தமான் மற்றும் நிகோபார் தவிர மற்ற வட்டாரங்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 777 சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலைுகையை பயனர்கள் ஆறு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 

அதன்பின் ரூ. 849 சலுகையை பயன்படுத்த வேண்டியிருக்கும். பி.எஸ்.என்.எல். ரூ. 849 சலுகையில் பயனர்களுக்கு 600 ஜி.பி. டே

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :