BSNL இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேணேட் சேவைகளை அறிவித்துள்ளது.

BSNL இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேணேட் சேவைகளை அறிவித்துள்ளது.
HIGHLIGHTS

பாரத் ஃபைபர் என அழைக்கப்படும் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்பி. வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதும், டெலிகாம் சேவை கட்டணம் முழுமையாக மாறிப்போனது. ஜியோவின் குறைந்த விலை டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைக்க ஆரம்பித்தன. 

டெலிகாம் சேவையை தொடர்ந்து பிராட்பேண்ட் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், போட்டிக்கு தயாராகும் வகையில் BSNL  இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேணேட் சேவைகளை துவங்தியுள்ளது.

பாரத் ஃபைபர் என அழைக்கப்படும் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்பி. வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கானதாகும். இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும். 

பிராட்பேண்ட் சலுகைகளை பொருத்த வரை பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் ரூ.777 விலையில் துவங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் 500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

BSNL. பாரத் ஃபைபர் விலை உயர்ந்த சலுகை ரூ.16,999 விலையில் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் 3500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 10Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் உடன் இலவச ஈமெயில் அக்கவுண்ட் ஒன்று வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo