அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் Jio, Airtel மற்றும் Vi அதிக பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கு, மேலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 2000ரூபாய்க்கு அதிகம செலவளித்தாலும் முழுசா 365 நாட்களுக்கு வேலிடிட்டி இருப்பதில்லை, ஆனால் பிஎஸ்என்எல் வெறும் 1999ரூபாயில் வரும் இந்த திட்டத்தில் முழுசா 1 வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிகபட்சமான டேட்டா, அன்லிமிடெட் காலிங்க என பல நன்மை வழங்குகிறது இதன் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
BSNL யின் ரூ,1999 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது அடுத்த ஆண்டு அதாவது 2026 வரை ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டியதில்லை. 2,000 க்கும் குறைவான விலையில், இந்த திட்டம் நிறைய நன்மைகளைத் தருகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், 600GB டேட்டா மற்றும் தினமும் 100SMS இதனுடன் நீங்கள் எந்த ஒரு நெட்வர்க்கிலிருந்தும் இலவச காலிங் நன்மை பெறலாம் மேலும் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்குகிறது.
இது தவிர, இந்த திட்டத்துடன் இலவச சப்ஸ்ச்க்ரிப்சன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் Hardy Games, Challenger Arena games, Gameon & Astrotell, Gameium, Lystn Podocast, Zing Music மற்றும் BSNL TUNES போன்ற நன்மைகள் வழங்குகிறது அதுபோல இலவச சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த திட்டம் பணவீக்கத்தின் போது தொலைத்தொடர்பு பயனர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் செயல்படுகிறது. திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேசைட்டை பார்வையிடலாம். அதாவது இந்த திட்டமான நீண்ட நாள் வரை ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடு பெற நினைப்பர்களுக்கு இது சிறப்பனதாக இருக்கும்.
இதையும் படிங்க BSNL யின் சூப்பர் பொங்கல் சலுகை வெறும் ரூ,399 யில் 3300GB வரையிலான டேட்டா