BSNL அதன் 5G சேவையை நோக்கிய உடன் சேர்ந்து உலக முழுதும் அறிமுகம் செய்ய உள்ளது

BSNL  அதன் 5G சேவையை  நோக்கிய உடன் சேர்ந்து உலக முழுதும் அறிமுகம் செய்ய உள்ளது
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் டெலிகாம் நிறுவனம் அதன் அல்ட்ரா ஹை ஸ்பீட் 5th ஜெனரேஷன் 5G சர்விசை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் .என தகவல் வெளியாகி உள்ளது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்   டெலிகாம்  நிறுவனம் அதன் அல்ட்ரா ஹை ஸ்பீட்  5th  ஜெனரேஷன் 5G  சர்விசை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் .என  தகவல் வெளியாகி உள்ளது. ஜியோவின் வருகைக்கு பிறகு பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. சில நிறுவனங்கள் மட்டும் அதற்கு போட்டியாக அடிக்கடி ஆஃபர்கள் அறிவித்து தன்னை நிலைநிறுத்தி வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

BSNL   டெலிகாம் நிறுவனம் Nokia, ZTE போன்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 5G  சேவையை  2020 வருடத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என BSNL  தலைமை பொது மேலாளர்அணில் ஜெயின்  கூறினார். இதனுடன் பிஸ்னல்  5G  சேவையை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. அதற்காக, 5ஜி தொழில்நுட்பம் குறித்து கோரியண்ட் நிறுவனத்தின் ஆலோசனையையும் BSNL பெற்றது. மேலும் லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களிடம் பிஎஸ்என்எல் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியது. அவர், 3ஜி, 4ஜி சேவைகளை விட அதிவேக 5 ஜி சேவையில் பயணிக்கலாம் என்று கூறினார்.

அனைத்து பங்குதாரர்களும் முன்கூட்டியே ஒத்துழைக்க வேண்டும், இதனால் 5 ஜி மொபைல் சுற்றுச்சூழல் ஒரு வலுவான முடிவுக்கு வரலாம். (C-DoT) சென்டர் டெவலப்மென்ட் ஆப் டெலிமாட்டிக்ஸ் நிர்வாக இயக்குனர்  விபின் தியாகி  கூறினார் 

BSNL அதன் ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ 999/- ஆகிய ப்ரீபெய்ட் அன்லிமிட்டட் காம்போ திட்டங்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது இனி இந்த திட்டங்களின் தினமும் நன்மைகளுடன் சேர்த்து 2 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா கிடைக்கும். 

மேலும் BSNL  3ஜி டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444- மற்றும் ரூ.448/- ஆகியவைகளும் கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மை வழங்கும் . ஜியோவின் கூடுதல் டேட்டா வாய்ப்பானது மூன்று வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், BSNL -ன் இந்த வாய்ப்பானது மொத்தம் 60 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கும்  என்பது கூடுதல் சிறப்பு. 

இந்த வைப்பில் ஜூன் 18, 2018 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் டேட்டாவை தவிர குறிப்பிட்டுள்ள திட்டங்களின் இதர நன்மைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.999/- ஆகிய 5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே தினசரி அல்லது வாராந்திர வரம்பில்லாத வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo