digit zero1 awards

இந்தியாவில் BSNL 5G எப்பொழுது கிடைக்கும் டெலிகாம் துறை மந்திரி வெளியிட்ட தகவல்.

இந்தியாவில் BSNL 5G எப்பொழுது கிடைக்கும் டெலிகாம் துறை மந்திரி வெளியிட்ட தகவல்.
HIGHLIGHTS

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார்

"பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் 2024 வாக்கில் துவங்கும்," என தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார். தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் நாடு முழுக்க சுமார் 70-க்கும் அதிக நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட்டுள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய டெலிகாம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் "பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் 2024 வாக்கில் துவங்கும்," என தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக கடந்த ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் ஆகஸ்ட் 2023 வாக்கில் வெளியாகும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருந்தார். 2023 ஜனவரி மாதம் 4ஜி சேவைகள் வழங்கும் பணி துவங்கும். பின் ஆகஸ்ட் 2023 வாக்கில் 5ஜி வெளியீடு படிப்படியாக துவங்கும் என அவர் தெரிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களின் படி முந்தைய திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பாதக தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவங்கி வைத்த மத்திய மந்திரி நாட்டில் பிஎஸ்என்எல் 5ஜி வெளியீடு பற்றிய கருத்துக்களை தெரிவித்தார். பிஎஸ்என்எல் தற்போது பயன்படுத்தி வரும் உள்கட்டமைப்புகளை கொண்டு 4ஜி-யில் இருந்து வேகமாக 5ஜி-க்கு அப்கிரேடு செய்து கொள்ள முடியும். மாநிலம் முழுக்க 4ஜி சேவைகளை வழங்குவதற்காக 100 டெலிகாம் டவர்கள் 100 கிராமங்களில் இன்ஸ்டால் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo