ஏர்டெல் 5 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளது.

Updated on 20-May-2020
HIGHLIGHTS

ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக Airtel

ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், பெறும் இழப்பை சந்தித்த ஏர்டெல் .

இந்தியாவில் முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகம் நிலவும் இந்த காலகட்டத்தில், தொலைதொடர்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவற்றின் மீதான அதிகப்படியான வரிகள், கட்டணங்கள் சுமையை ஏற்படுத்துவதாகவும், அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், நிறுவனம் பெறும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :