ரிலையன்ஸ் ஜியோவுக்கு சவால் விடும் ஏர்டெல் நாங்களும்அதிவேக 4G சேவையை கொடுப்போம்ல

Updated on 29-Oct-2018
HIGHLIGHTS

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களை ஒரேகட்டமாக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களை ஒரேகட்டமாக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுவரை ஏர்டெல் நிறுவனம்  2ஜி மற்றும் 3ஜி  சேவையை வாங்கி வந்தது இதனுடன்  இன்னும் முழுழுமையாக சில பேருக்கு 4G  நெட்வர்க்  சப்போர்ட் கிடைக்கவில்லை அதனை தொடர்ந்து ஏர்டெல் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு வழங்க இருக்கிறது 

இந்த புதிய திட்டத்தின் மூலம் சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ4G  மற்றும் 5G சேவையை வழங்குவதை பற்றி அறிவித்து இருந்தது அதனை தொடர்ந்து இப்பொழுது  ஏர்டெல்  நிறுவனம் ஜியோவுக்கு சவால் விடும் வகையில்  அதிவேக 4ஜி நெட்வர்க் வழங்குவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பு  உங்களை விட  நல்ல நெட்வர்க்  கொடுக்க முடியும் என்பதை போல் இருக்கிறது 

ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் ஏர்டெல் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்படுபவர். இதற்கென ஏர்டெல் நிறுவனம் 900 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரக்கை பயன்படுத்தி 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க இருக்கிறது. ஜியோவுக்கு சமமான போட்டியை வழங்க ஏர்டெல் நிறுவனத்தின் உச்சக்கட்ட முடிவாக இது இருக்கும் என கூறப்படுகிறது

“சமீப காலங்களில் 4ஜி நெட்வொர்க்கிற்கு அதிகளவு தேவை ஏற்பட்டு இருக்கிறது, எங்களது 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் 4ஜி பயனர்களுக்கு  அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும், இதே நேரத்தில் எங்களின் 2ஜி சேவைகள் 1800 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்கப்படும்,” என ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியான கோப்பால் விட்டல் தெரிவித்தார். 

இப்பொழுது  அனைவருமே அதிவேக நெட்வேர்க் விரும்புகிறார்கள் 4G சேவையை போல எனவே இதன் காரணமாக 3ஜி நெட்வொர்க்கில் இருந்து போதுமான வருவாய் கிடைப்பதில்லை இதனை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் 4G  நெட்வர்க் வழங்க இருக்கிறது அதாவது இப்பொழுது  3ஜி நெட்வொர்ககில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றுகிறது. 

இந்தியா முழுக்க 16 வட்டாரங்களில் 116 யூனிட் அலைக்கற்றைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஏர்டெல் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. இவை முழுக்க 4ஜி சேவைக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்குவதற்கான பணிகளை செய்து இருக்கிறது .

தமிழ் நாடு, உத்திர பிரதேசம் மேற்கு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில், ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில்  இந்த புதிய சலுகைகளை அறிவித்தது. இவற்றின் விலை ரூ.25 முதல் துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :