Airtel பயனர் இனி வானில் பறந்து கொண்டே பேசலாம் ரூ,195 ஆரம்பம்

Updated on 23-Feb-2024
HIGHLIGHTS

Bharti Airtel அறிமுகம் செய்துள்ளது in-flight ரோமிங் பேக்

இந்த பிளான் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இது பொருந்தும்

இது in-flight விமானத்தின் போது உலகத்துடன் இணைந்திருக்க அவர்களுக்கு உதவும்

Bharti Airtel அறிமுகம் செய்துள்ளது in-flight ரோமிங் பேக் இந்த பிளான் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இது பொருந்தும். இது in-flight விமானத்தின் போது உலகத்துடன் இணைந்திருக்க அவர்களுக்கு உதவும். இந்த பேக் ஹை ஸ்பீட் இன்டர்நெட் ப்ரவுசிங் டேட்டா, இலவச காலிங் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான இலவச SMS சேவைகளை வழங்குகிறது என்று டெலிகாம் ஆபரேட்டர் கூறினார். தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்கு, இந்தச் சேவை சிறப்பு சர்வதேச ரோமிங் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நீண்ட விமானங்களில் சர்வதேச அளவில் பயணம் செய்பவர்களுக்கும் இதே போன்ற பேக்குகளை வழங்குகிறது இந்த திட்டத்தை பற்றி முழு தகவல்களை பார்க்கலாம்.

Airtel கஸ்டமரிடம் பயனர்கள் தனி ரீசார்ஜ் பேக்கை வாங்க விரும்பவில்லை என்றால், ஏர்டெல் அதன் சர்வதேச ரோமிங் திட்டங்களிலும் இதே போன்ற பலன்களை வழங்குகிறது. ரூ.2,997 மற்றும் அதற்கு மேல் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை எடுப்பவர்களுக்கு தானாகவே 250எம்பி டேட்டா, 100 நிமிட இலவச அவுட்கோயிங் கால்கள் மற்றும் 100 SMS கிடைக்கும். அதேபோன்று, ரூ.3,999 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்ட பயனர்கள், ப்ரீபெய்ட் திட்டங்களைப் போன்ற பலன்களை வழங்கும் சர்வதேச ரோமிங் பேக்கிர்க்கு செல்லலாம்.

Airtel International Roaming Packs

Airtel International Roaming Packs

Airtel யின் உள்ள ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக உலகெங்கிலும் உள்ள இண்டர்நேசனல் ரோமிங் பேக் சுமார் 180 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் மற்றும் இது 24/7 கஸ்டமர் சப்போர்ட் வழங்குகிறது இப்போது, ​​ in-flight வழங்கப்படும் சலுகைகள் தற்போதுள்ள IR பேக்குகளுக்கு மற்றொரு கூடுதல் நன்மையாக இருக்கும்.

Airtel யின் புதிய ரோமிங் பேக் குறைந்தபட்சம் ரூ,195 யில் ஆரம்பம்பமகிறது இந்த திட்டம்னது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் யின் இருவருக்கும் பொருந்தும். இதை தவிர ஏர்டெல் மூன்று in-flight திட்டங்களை வழங்குகிறது அதில் டேட்டா,வொயிஸ் மற்றும் SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது.

#Airtel அறிமுகம் செய்துள்ளது In-Flight வெறும் ரூ,195 யில் ஆரம்பம்

Airtel In-Flight Roaming Packs

ஏர்டெல்லின் இன்-ஃப்ளைட் ரோமிங் திட்டங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.195 யில் தொடங்குகின்றன. அனைத்து திட்டங்களின் வேலிடிட்டி காலம் 24 மணிநேரம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் இருவரும் ரூ.195 திட்டத்தில் 250எம்பி டேட்டா, 100 நிமிட அவுட்கோயிங் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் SMS ஆகியவற்றைப் வழங்குகிறது.

இதன் அப்டேட்டுக்கு ரூ.295க்கு கிடைக்கிறது, இது 100 நிமிட இலவச காலிங் மற்றும் 100 அவுட்கோயிங் SMS உடன் 500MB டேட்டாவை வழங்கும். மிகவும் விலையுயர்ந்த திட்டத்தின் விலை ரூ.595 ஆகும், இது 1ஜிபி டேட்டா மற்றும் இதே போன்ற காலிங் மற்றும் SMS நன்மைகளை வழங்குகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு இடையே விலை அல்லது நன்மைகளில் எந்த வித்தியாசமும் இல்லை.

#Airtel In-Flight Roaming Packs

கனேக்டிவிட்டியின் நோக்கம்

Airtel திட்டங்களை அறிவித்து, நிறுவனம் அதன் பயனர்களுக்கு கனேக்டிவிட்டியை செயல்படுத்த இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விமானத்தில் டெலிகாம் சேவை வழங்குநரான ஏரோமொபைலுடன் கூட்டு சேர்ந்துள்ளது. பல்வேறு சர்வதேச பிராந்தியங்களில் பறக்கும் 19 விமான நிறுவனங்களில் இந்த சேவை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. எந்த விமான நிறுவனங்கள் சேர்க்கப்படும் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், ஏரோமொபைல் சேவை செய்யும் விமான நிறுவனங்களுக்கு இது கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: iQOO Neo 9 Pro இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Customer Support and Real-Time Assistance

இதை தவிர பயணத்தின்போது 24X7 கான்டேக்ட் சென்டர் மூலம் உதவியை பெறலாம், என airtel கூறுகிறது இதை தவிர கூடுதலாக நிறுவனம் ஒரு WhatsApp நம்பர் 99100-99100 யில் கால் செய்யலாம், அதன் கான்டேக்ட் சென்டர் மூலம் கேள்விகள் மற்றும் புகார்கள் 24 மணிநேரமும் தீர்க்கப்படுகின்றன. டேட்டா ஆப்பை கண்காணிக்கவும், கூடுதல் நிமிடங்களை வாங்கவும் அல்லது real-time பில்லிங் விவரங்களைப் பெறவும் பயனர்கள் Airtel Thanks ஆப் யில் லோகின் செய்யலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :