பார்தி ஏர்டெல் நீண்ட நாட்களுக்கு பிறகு அதன் ப்ரீபெயிட் கஸ்டமர்களுக்கு நல்ல ஆபர் ஒன்று அறிவித்துள்ளது நிறுவனம் இப்பொழுது அதன் 399ரூபாய்க்கு ப்ரீபெயிட் திட்டத்தில் சில மாற்றங்களுடன் கொண்டுவந்துள்ளது இந்த திட்டத்தில் முதலில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கியது ஆனால் இப்பொழுது பயனர்களுக்கு இந்த திட்டத்தில் மாற்றம் செய்து இப்பொழுது தினமும் 2.4GB டேட்டா வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இதன் வேலிடிட்டி 70 நாட்களாக இருக்கிறது மற்றும் இதில் சிலவற்றில் 84 நாட்களுக்கு இருக்கிறது இந்த புதிய திட்டடம் இதன் அசல் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் செல்லுபடியாகும். ரூ. 399 என்ற திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதுடன், நிறுவனம் ரூ. 1.97 என்ற அளவிலான டேட்டா வீதத்தையும் குறைத்து விட்டது, இது மிக குறைந்த விகிதமாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த திட்டம் லிமிட்டட் பயனாளர்களுக்கு செல்லுபடியாகும், இது நிறுவனத்திலிருந்து எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில், ஏர்டெல் இந்தத் திட்டத்தை ஓபன் சந்தையில் வெளியிடக்கூடும்.
399 என்ற திட்டத்தில், மற்ற பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா கிடைக்கிறது, மேலும் கூடுதலாக அன்லிமிட்டட் வொய்ஸ் கால்களும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இதுவே முதல் முறையாகும். ஏர்டெல் நிறுவனம் 2.4 ஜிபி டேட்டாக்களை 399 ரூபாய்களில் வழங்கி வருகிறது.
மற்றொன்று ரிலையன்ஸ் ஜியோ அதன் 399 ரூபாய் கொண்ட திட்டத்தில் 100 ருபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கியது. ஆதன் பிறகு 299ரூபாய்க்கு வழங்கி வந்தது. ஆனால் இந்த ஆபர் ஏற்கெனவே பயனர்களுக்கு ரூ. 50 வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் , அடுத்த 50 ரூபாய்க்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏர்டெல் தள்ளுபடி விலையைக் காட்டிலும் டேட்டா நன்மைகளை அதிகரித்துள்ளது, ஆனால் முன்னர் சொன்னது போல் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வேலிடிட்டியாக இருக்கிறது .
ஜியோ 399 பேக்கில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது, ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி அனைத்து பயனர்களுக்கும் 84 நாட்கள் ஆகும். ஏர்டெல் போன்ற, ஜியோ இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இரு நிறுவனங்களும் திட்டத்தில் வொய்ஸ் கால்களுக்கு எந்தவொரு FUP லிமிட் பின்பற்றவில்லை