பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க அமேசான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த முதலீடு வெற்றிகரமாக நிறைவுறும் பட்சத்தில் அமேசான் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க முடியும்.
இந்திய டெலிகாம் சந்தையில் சுமார் 30 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது பெரும் நிறுவனமாக விளங்கி இருக்கிறது. பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இடையேயான பேச்சுவாரத்தை முதற்கட்டத்தில் தான் இருக்கிறது என கூறப்படுகிறது.
சமீப காலங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வரும் நிலையில், பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமேசான் நிறுவனம் இந்திய ஆன்லைன் துறையில் இதுவரை ரூ. 49,100 கோடி மதிப்பிலான முதலீடுகளை செய்ய இருப்பதாத தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களில் மட்டும் ஃபேஸ்புக், கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் இதர நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை செய்தன. இதுதவிர அபுதாபியை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.