Amazon Prime Video பயனர்களுக்கு அதிர்ச்சி இனி அதிகம் பணம் கொடுக்கணும்
Amazon Prime Video நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போலவே செய்கிறது
நெட்ஃபிளிக்ஸ் பல நாடுகளில் அதன் பேஸ் திட்டத்துடன் பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுகிறது
இது ஜனவரி 29 முதல் அமலுக்கு வந்துள்ளது,
Amazon Prime Video நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போலவே செய்கிறது நெட்ஃபிளிக்ஸ் பல நாடுகளில் அதன் பேஸ் திட்டத்துடன் பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுகிறது. இதேபோன்ற முடிவை பிரைம் வீடியோ எடுத்துள்ளது. இது ஜனவரி 29 முதல் அமலுக்கு வந்துள்ளது, மேலும் விளம்பரங்களைத் தவிர்க்க பயனர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். இந்த மாற்றம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் இருந்து தொடங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தொடர்பாக அந்நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
OTT பிளாட்பாரம் Prime Video மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில், மிர்சாபூர், பஞ்சாயத்து, ஃபேமிலி மேன், ஃபார்ஸி போன்ற வெப் சீரிஸ்கள் மற்றும் பல படங்கள் இந்த மேடையில் கிடைக்கின்றன. பிரைம் வீடியோவில் வெளிநாட்டுத் தொடர்கள் மற்றும் படங்களின் பொக்கிஷம் உள்ளது. தற்போது புதிய வசதிகளை வழங்குகிறோம் என்ற பெயரில் பயனாளர்களிடம் இருந்து கூடுதல் பணம் வசூலித்து வருகிறது.
Prime Video சப்ஸ்க்ரைப் செய்த பயனர்கள் ஈமெயில் பெறுவார்கள். பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும், அப்போதுதான் அவர்கள் விளம்பரம் இல்லாத கன்டென்ட் பார்க்க முடியும். அறிக்கையின்படி, அமெரிக்காவில் பிரைம் வீடியோவின் பழைய மெம்பர்கள் மாதத்திற்கு US $ 2.99 கூடுதலாக செலுத்த வேண்டும். மற்ற நாடுகளில், விளம்பரம் இல்லாத திட்டத்தின் விலை மற்றும் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க:Jio அறிமுகம் செய்துள்ளது AI பிளாட்பாரம் Jio Brain இதனால் என்ன பயன்?
கூடுதல் கட்டணத்திற்கு ஈடாக, நிறுவனம் அதன் பிளாட்பார்மில் கூடுதல் அம்சங்களையும் நன்மைகளையும் கொண்டு வரும் என்று கூறுகிறது. இருப்பினும் அதன் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. பிரைம் வீடியோ இந்தியாவின் கன்டென்ட் பற்றி பேசுகையில், இந்திய போலீஸ் போர்ஸ் சமீபத்தில் ப்ல்கட்பார்மில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, பிரைம் வீடியோவில் மிர்சாபூர்-3, ஃபேமிலி மேன்-3, பஞ்சாயத்து-3 போன்ற வெப் சீரிஸ்கள் வெளியாக உள்ளன. ஃபார்ஸியின் அடுத்த பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile