அமேசான் அதன் புதிய ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையை அறிமுகம் செய்துள்ளது Amazon prime Lite லைட்டின் டெஸ்டிங் இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வந்தது, இப்போது நிறுவனம் அதை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் பிரைம் லைட் என்பது வருடாந்திர திட்டமாகும், இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இரண்டு நாள் டெலிவரி, பிரைம் வீடியோ கன்டென்ட் சேவையை குறைந்த கட்டணத்தில் பெறுவார்கள், Amazon Prime Lite யின் விலை 999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது , அதே போல் ஜியோசினிமா 999 ரூபாய்க்கான பிரீமியம் சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த இரு திட்டத்தில் எது அதிக நன்மை வழங்குகிறது என்று பாப்போம்
ஜியோ சினிமாவின் சபஸ்க்ரிப்ஷன் 12 மாதங்கள் வேலிடிட்டியுடன் .வருகிறது, இதை எந்த டிவைஸிலும் பயன்படுத்த முடியும் அதாவது மொபைல், லேப்டாப், கம்பியூட்டர் மற்றும் டேப்லெட் எந்த சாதனத்திலும் பார்க்கலாம். இது சிறந்த வீடியோ மற்றும் ஆடியோ தரத்தை வழங்குகிறது. இந்த சந்தா திட்டத்தில், ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் கன்டென்டை பார்க்கலாம். ஜியோ சமீபத்தில் ஹாலிவுட் கன்டென்ட் வழங்க சர்வதேச கன்டென்ட் வழங்குனருடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஜியோ சினிமாவைப் போலவே, அமேசான் பிரைம் லைட்டிலும் 12 மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வரம்பற்ற வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான அணுகல் இந்த சந்தா திட்டத்தில் கிடைக்கும். இந்த திட்டத்தில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் HD கன்டென்டை பார்க்க முடியும்.
Amazon Prime Lite சந்தா கொண்ட பயனர்கள் Amazon யிலிருந்து ஏதேனும் பொருட்களை ஆர்டர் செய்தால், அது பாஸ்ட் டெலிவரி செய்யப்படும். 2 நாட்களுக்குள் பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், நீங்கள் 25 சதவீத கேஷ்பேக்கை அனுபவிக்க முடியும். மேலும், Amazon Pay ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கும் போது 5 சதவீத தள்ளுபடியை அனுபவிக்க முடியும்.