Airtel Xstream Broadband Lite பிளான் அறிமுகம் குறைந்த விலையில் கிடைக்கும் பல நன்மை.

Updated on 28-Apr-2023
HIGHLIGHTS

ஏர்டெல் சமீபத்தில் அதன் பைபர் ப்ரோடுபேண்ட் சேவையை குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.219 விலையில் உள்ள புதிய திட்டத்திற்கு 'பிராட்பேண்ட் லைட்' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், பிராட்பேண்ட் பிரிவில் நல்ல பட்ஜெட் விருப்பத்தைத் தேடும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாகும்

ஏர்டெல் சமீபத்தில் அதன் பைபர் ப்ரோடுபேண்ட் சேவையை  குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.219 விலையில் உள்ள புதிய திட்டத்திற்கு 'பிராட்பேண்ட் லைட்' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏர்டெல் பிராட்பேண்டிற்கு கிடைக்கும் பாஸ்ட் இன்டர்நெட் திட்டம் இதுவாகும். இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டமாக பட்டியலிடப்பட்டுள்ளது. பாஸ்ட் இன்டர்நெட் மற்றும் பல அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், பிராட்பேண்ட் பிரிவில் நல்ல பட்ஜெட் விருப்பத்தைத் தேடும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

Airtel Xstream ப்ரோடுபேண்ட் பிளான்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் லைட் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.219 மற்றும் வருடாந்திர சந்தாவுக்கு மட்டுமே கிடைக்கும். இதன் பொருள் பயனர்கள் திட்டத்தில் பதிவு செய்ய மொத்தம் ரூ.3,101 செலுத்த வேண்டும். திட்டத்தின் பிற விவரங்களைப் பற்றி பேசுகையில், பயனர்கள் 10 Mbps பிராட்பேண்ட் வேகத்தைப் வழங்குகிறது .திட்டத்துடன் பயனர்கள் இலவச ரூட்டரையும் வழங்குகிறது .

91 மொபைலின் படி  புதிய ஏர்டெல் ப்ரோடுபேண்ட்  லைட் பிளான் தற்பொழுது வெறும்  பீகார், உத்தரப் பிரதேச கிழக்கு மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் OTT அல்லது லைவ் டிவி பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. பின்னர் நாட்டின் பிற நகரங்களில் இது கிடைக்குமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

Airtel Xstream Fiber   ப்ரோடுபேண்ட் யின் மற்ற பிளான்.

நீங்கள் அதிக நன்மை கொண்ட மற்ற ப்ரோடுபேண்ட் திட்டத்தை தேடுகிறீர்களானால், நீங்கள் Xstream Fiber  ப்ரோடுபேண்ட்  பலனை பார்க்கலாம்.

  • ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்டின் அடிப்படை திட்டமானது மாதத்திற்கு ரூ.499 விலையில் 40 எம்பிபிஎஸ் வேகம், அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் கால்கள் மற்றும் அப்பல்லோ 24/7, ஃபாஸ்டாக் மற்றும் விங்க் மியூசிக் சந்தா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்டின் 799 ரூபாயின் திட்டத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 100 எம்பிபிஎஸ் வரையிலான ஸ்பீட் மற்றும் எக்ஸ்ட்ரீம் பிரிமியம் பேக் மெம்பர்ஷிப் நன்மை வழங்குகிறது.
  • பொழுதுபோக்குத் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.999 மற்றும் 200 Mbps வரையிலான வேகம் மற்றும் Disney+ Hotstar, Amazon Prime மற்றும் Extreme Premium பேக்குகளுக்கான மெம்பர்ஷிப்பை உள்ளடக்கியது.
  • இதன் ப்ரொபெஷனல் திட்டத்தின் விலை 1,498  ருபாய் மதந்திரமாக வைக்கப்பட்டுள்ளது.மற்றும் இதில் 300Mbps ஸ்பீட் மற்றும் நெட்ப்ளிக்ஸ் சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, மேலும் இதில் மிக விலை உயர்ந்த திட்டம் மாதாந்திர 3,999 ரூபாயாக மாதாந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் 1Gbps  வரையிலான ஸ்பீடுடன் அனைத்து நன்மையும் வழங்கப்படுகிறது.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :